ETV Bharat / state

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - ரூ. 16 லட்சம் பயணக் கட்டணம் காணவில்லை!

மதுரை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பயணக் கட்டணமாக வசூலிக்கப்பட்ட தொகை ரூபாய் 16 லட்சத்தை காணவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author img

By

Published : Dec 29, 2020, 5:16 PM IST

TNSTC ticket money missing
TNSTC ticket money missing

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் ஒவ்வொரு கிளைகளிலும் இயங்கும் பேருந்துகளில் வசூலாகும் பயண கட்டணத்திற்கான பணத்தை மறுநாள் வங்கியில் செலுத்துவது வழக்கம். கடந்த வாரம் சனி, ஞாயிறு விடுமுறை, அதனால் நேற்று அலுவலகத்தில் இருந்த பணம் எண்ணப்பட்டது. அப்போது ரூபாய் 16 லட்சம் காணாமல் போனது தெரிய வந்தது.

இதனால் போக்குவரத்து ஊழியர்கள், அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து எல்லீஸ் நகர் கிளை மேலாளர், மதுரை எஸ் எஸ் காலனி காவல்துறையிடம் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் காவல்துறை விசாரித்து வருகிறது. முதல்கட்டமாக 3 ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.