மதுரை மாவட்டம் சிம்மக்கல் பகுதியில் மாவட்ட மைய நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தில் 2014ஆம் ஆண்டு நூலக அதிகாரியாக ரவீந்திரன் என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில், 2014-2016 காலகட்டங்களில் நூலக பராமரிப்பிற்காக அரசு ஒதுக்கிய 4 லட்சத்து 71 ஆயிரத்து 317 ரூபாய் பணத்தை நூலக பராமரிப்பிற்கு பயன்படுத்தாமல், போலியான ஆவணங்களைத் தயாரித்து கூடுதல் வேலை பார்த்ததாக கணக்கு காட்டியதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் வந்ததுள்ளது.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய விசாரணையில், ஒப்பந்ததாரர் ராமலிங்கத்தின் துணையுடன் ரவீந்திரன் மோசடி செய்தது தெரியவந்தது. மதுரை மாவட்ட ஊழல் கண்காணிப்பு, லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் இருவரிடமும் விசாரணை செய்ய முடிவெடுத்தனர். ஆனால் ரவீந்திரன் சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார். இருப்பினும், அரசு பணத்தை மோசடி செய்ததாக ரவீந்திரன், ஒப்பந்ததாரர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.