தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சென்னையைத் தொடர்ந்து, இன்று நள்ளிரவு முதல் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மதுரை மாவட்டத்திற்கான கரோனா தடுப்பு சிறப்பு அலுவலராக இருந்த தர்மேந்திர பிரதாப் மாற்றம் செய்யப்பட்டு, சந்திர மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள ஆணையில், ''மதுரை மாவட்ட கரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலராக இருந்த தர்மேந்திர பிரதாப் ஐஏஎஸ் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக புதிய கரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலராக சந்திர மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தர்மேந்திர பிரதாப் ராமநாதபுரம் மாவட்ட கரோனா தடுப்பு அலுவலராக மாற்றப்பட்டுள்ளார்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 849ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மதுரையில் முழு ஊரடங்கு: எதற்கு அனுமதி? எதற்கு அனுமதியில்லை?