ETV Bharat / state

அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்குவதற்கு அரசுத் தரப்பில் எதிர்ப்பு - நீதிமன்றத்தில் காரசார வாதம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 19, 2023, 3:36 PM IST

ED officer Ankit Tiwari bail: அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி அவரது வாக்கு மூலத்தில் மேலும் சில அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதாக கூறியுள்ள நிலையில் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க கூடாது

மதுரை: திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவை மிரட்டி 20 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மதுரை அமலாக்கத்துறை மண்டல துணை அதிகாரி அங்கித் திவாரி, தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவானது நீதிபதி சிவஞானம் முன்பு இன்று (டிச.19) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, “அங்கித் திவாரி உரிய ஆதாரங்களோடு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் பல அமலாக்கத்துறை உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளது. அங்கித் திவாரியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினால் மட்டுமே, லஞ்சம் பெற்ற விவகாரத்தில் மேலும் பல அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தொடர்புள்ளது கண்டறியப்படும்.

மேலும், அங்கித் திவாரி மடிக்கணினியில் இருந்து முக்கியமான ஆவணம் சிக்கி உள்ளது. அதில் தமிழகத்தில் லஞ்ச வழக்குகளில் சிக்கி உள்ள 75 பேரை பெயருடன் பட்டியலிட்டுள்ளார். இது அதிர்ச்சி அளிக்கிறது. எனவே, இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

வழக்குகள் நிலுவையில் உள்ள பலரை மிரட்டி பணம் பெற்றுள்ளதாக, அங்கித் திவாரியே காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், திண்டுக்கல் அரசு மருத்துவர் மீது வழக்கு ஏதும் இல்லை என குறிப்பிட்டு அங்கித் திவாரி ஜாமீன் கோரியுள்ளார். ஆனால், திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ்பாபு மற்றும் அவரது மனைவி மீது மதுரை மண்டல அலுவலகத்தில் வழக்கு உள்ளது.

இதையும் படிங்க: அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமீன் கோரிய வழக்கு... டிச.19-க்கு ஒத்திவைப்பு!

தற்போது ரூ.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், மேலும் 20 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட வேண்டி உள்ளது. அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன், அவர் வீடு மற்றும் அலுவலகங்களில் கைப்பற்றப்பட்ட லேப்டாப் மற்றும் ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

காரில் அங்கித் திவாரி பணம் பெறும்போது, அவருடைய குரல்பதிவு மற்றும் வீடியோவானது பதிவு செய்யப்பட்டுள்ளது. இது உண்மையா என்பதை கண்டறிய, அவருடைய குரலை பதிவு செய்து, ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கினால் வழக்கின் விசாரணை பாதிக்கப்படும். அங்கித் திவாரியை பாதுகாக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் முயல்கின்றனர். திவாரி கைது செய்யப்பட்டு, அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை அவர் மீது அமலாக்கத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அமலாக்கத்துறை அதிகாரிகள் அங்கித் திவாரியை பாதுகாக்க முயற்சிக்கின்றனர்.

மேலும், இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை செய்ய முழு அதிகாரம் உள்ளது எனவும், விசாரணையை தொடரலாம் எனவும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ஏற்கனவே தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே, இவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது, வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதிட்டார்.

இதனைத் தொடர்ந்து, அங்கித் திவாரி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், அங்கித் திவாரி மீது ஏற்கனவே எந்த வழக்கும் இல்லை எனவும், அவர் மீது வழக்கு புனையப்பட்டுள்ளது எனவும் கூறினார். மேலும், இந்த பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் திட்டமிட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மத்திய அரசு அதிகாரி என்பதால் வழக்கின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவார். எனவே, அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என வாதிட்டார். இந்நிலையில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்படும் என கூறி உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: லஞ்ச வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரிக்கு சிறையில் முதல் வகுப்பு! நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.