ETV Bharat / state

26 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள்: தேர்தலை சந்திக்கும் மதுரை - Madurai district

மதுரை: மாவட்டத்தில் அதிகபட்சமாக மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் மூன்று லட்சத்து 28 ஆயிரத்து 990 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்தபட்சமாக சோழவந்தான் சட்டப்பேரவைத் தொகுதியில் இரண்டு லட்சத்து 18 ஆயிரத்து 506 வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்குப் பதிவு
வாக்குப் பதிவு
author img

By

Published : Apr 6, 2021, 7:42 AM IST

Updated : Apr 6, 2021, 7:54 AM IST

தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் இன்று (ஏப்ரல்.06) ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 26 லட்சத்து 97 ஆயிரத்து 682 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். தேர்தல் பணிக்காக பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வாக்குச்சாவடிகள்

  • உசிலம்பட்டியில் 410 வாக்குச்சாவடிகள்,
  • திருப்பரங்குன்றம் 458,
  • திருமங்கலம் 402 ,
  • சோழவந்தான் 305,
  • மேலூர் 346,
  • மதுரை மேற்கு 434,
  • மதுரை தெற்கு 326,
  • மதுரை வடக்கு 347,
  • மதுரை கிழக்கு 479,
  • மதுரை மத்தி 349 வாக்குச்சாவடிகள் என மாவட்டம் முழுவதும் இரண்டாயிரத்து 716 வாக்குப்பதிவு மையங்களில் மூன்றாயிரத்து 856 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஆயிரத்து 330 வாக்குச்சாவடிகள் பதட்டமானவையாகக் கண்டறியப்பட்டுள்ளன.

வேட்பாளர்கள்

  • திருப்பரங்குன்றத்தில் 23 பேர்,
  • உசிலம்பட்டி 14 பேர்,
  • மேலூர் 15 பேர்,
  • திருமங்கலம் 24 பேர்,
  • மதுரை மேற்கு 15 பேர்,
  • மதுரை மத்தி 14 பேர்,
  • மதுரை தெற்கு 13 பேர்,
  • மதுரை வடக்கு 15பேர்,
  • சோழவந்தான் 20 பேர்,
  • மதுரை கிழக்கு 15 பேர் என மொத்தம் 158 வேட்பாளர்கள் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் களம் காண்கின்றனர். மேற்கண்ட 10 தொகுதிகளிலும் 18,508 வாக்குச்சாவடி அலுவலர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

கரோனா பாதுகாப்பு நடவடிக்கையின் காரணமாக ஆயிரத்து 50 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளில், வாக்காளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து மாவட்டம் முழுவதும் கூடுதலாக ஆயிரத்து 140 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

ஐந்தாயிரத்து 21 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், மூன்றாயிரத்து 856 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், மூன்றாயிரத்து 856 விவி பேட் இயந்திரங்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

ஏதேனும் வாக்குச்சாவடி மையங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், ஆயிரத்து ஒன்பது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 774 கன்ட்ரோல் யூனிட்கள், ஆயிரத்து 120 விவி பேட் கருவிகள் என மாற்று ஏற்பாடாக 20 விழுக்காடு கூடுதல் இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மூன்றாயிரத்து 400 மத்திய பாதுகாப்புப் படை மற்றும் மாநகர, மாவட்டக் காவல் துறையினர் என மொத்தம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 20 நிமிடங்களுக்கு முன்னதாகவே வாக்குச் சாவடி மையம் வந்த 'தல' அஜித்

Last Updated : Apr 6, 2021, 7:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.