மதுரை: திருநெல்வேலியில் இருந்து புறப்படும் மற்றும் வந்து செல்லும் ரயில்களின் கால அட்டவணை, அக்டோபர் 1 முதல் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் அக்டோபர் 1 முதல் புதிய ரயில் கால அட்டவணை அமுலுக்கு வருவது வழக்கம். அதன்படி, திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் சில ரயில்களின் கால அட்டவணையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
The comprehensive update to Southern Railway’s Time Table is scheduled to come into force on October 1, 2023
— Southern Railway (@GMSRailway) September 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
The following trains have been speeded up details
as given below#southernrailway #timetable #October2023 #speedup pic.twitter.com/ZTqy1kgNhk
">The comprehensive update to Southern Railway’s Time Table is scheduled to come into force on October 1, 2023
— Southern Railway (@GMSRailway) September 30, 2023
The following trains have been speeded up details
as given below#southernrailway #timetable #October2023 #speedup pic.twitter.com/ZTqy1kgNhkThe comprehensive update to Southern Railway’s Time Table is scheduled to come into force on October 1, 2023
— Southern Railway (@GMSRailway) September 30, 2023
The following trains have been speeded up details
as given below#southernrailway #timetable #October2023 #speedup pic.twitter.com/ZTqy1kgNhk
தாம்பரம் - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (22657) திருநெல்வேலியில் இருந்து அதிகாலை 05.40 மணிக்கு பதிலாக, அதிகாலை 05.35 மணிக்கு 5 நிமிடங்கள் முன்னதாக புறப்படும். பெங்களூரு - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (17235) திருநெல்வேலியில் இருந்து காலை 06.05 மணிக்கு பதிலாக காலை 05.55 மணிக்கு, அதாவது 10 நிமிடங்கள் முன்னதாக புறப்படும்.
சென்னை - கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் (20685) திருநெல்வேலியில் இருந்து காலை 06.50 மணிக்கு பதிலாக காலை 06.30 மணிக்கு, அதாவது 20 நிமிடங்கள் முன்னதாக புறப்படும். மும்பை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (16339) திருநெல்வேலியில் இருந்து காலை 08.25 மணிக்கு பதிலாக காலை 08.20 மணிக்கு, அதாவது 5 நிமிடங்கள் முன்னதாக புறப்படும்.
எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் வாராந்திர எக்ஸ்பிரஸ் (12689) திருநெல்வேலியில் இருந்து காலை 09.13 மணிக்கு பதிலாக காலை 08.40 மணிக்கு, அதாவது 33 நிமிடங்கள் முன்னதாக புறப்படும். தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (20691) திருநெல்வேலியில் இருந்து காலை 11.30 மணிக்கு பதிலாக காலை 11.20 மணிக்கு, அதாவது 10 நிமிடங்கள் முன்னதாக புறப்படும்.
திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (22627) திருநெல்வேலியில் இருந்து மதியம் 12.30 மணிக்கு பதிலாக மதியம் 12.20 மணிக்கு, அதாவது 10 நிமிடங்கள் முன்னதாக புறப்படும். கோயம்புத்தூர் - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (16322) திருநெல்வேலியில் இருந்து மாலை 06.25 மணிக்கு பதிலாக, மாலை 06.05 மணிக்கு 20 நிமிடங்கள் முன்னதாக புறப்படும்.
கொல்லம் - சென்னை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் (20636) திருநெல்வேலியில் இருந்து இரவு 08.05 மணிக்கு பதிலாக இரவு 08.00 மணிக்கு, அதாவது 5 நிமிடங்கள் முன்னதாக புறப்படும். திருநெல்வேலி - திருச்செந்தூர் சிறப்பு ரயில் எக்ஸ்பிரஸ் (06675) திருநெல்வேலியில் இருந்து காலை 10.40 மணிக்கு பதிலாக காலை 10.10 மணிக்கு, அதாவது 30 நிமிடங்கள் முன்னதாக புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: “குயில்லன் பார்ரே” என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட நபரை குணமடையச் செய்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாதனை!