ETV Bharat / state

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை டிசம்பர் வரை நீட்டிப்பு - தெற்கு ரயில்வே! - All state Railway news in Tamil

Tirunelveli - Mettupalayam special train service extended: திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவையை டிசம்பர் மாதம் வரை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

tirunelveli-mettupalayam-special-train-service-extended-till-december
திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை டிசம்பர் வரை நீட்டிப்பு!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 26, 2023, 10:26 PM IST

மதுரை வழியாக இயக்கப்படும் திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவையை டிசம்பர் மாதம் வரை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜபாளையம், மதுரை வழியாக இயக்கப்படும் 'திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி' சிறப்பு ரயில் சேவை நவம்பர் மாதம் வரை செயல்படும் என ஏற்கனவே தெற்கு ரயில்வே அறிவித்து இருந்தது. தற்போது, இந்த ரயில் சேவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, திருநெல்வேலியிலிருந்து இரவு 07.00 மணிக்குப் புறப்படும் மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் (06030) டிசம்பர் 3, 10, 17, 24 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட்டு மறுநாள் காலை 07.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்று சேரும்.

மறு மார்க்கத்தில் மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 07.45 மணிக்குப் புறப்படும் திருநெல்வேலி சிறப்பு ரயில் (06029) டிசம்பர் 4, 11, 18, 25 ஆகிய திங்கட்கிழமைகளில் இயக்கப்பட்டு மறுநாள் காலை 07.45 மணிக்குத் திருநெல்வேலி வந்து சேரும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: டி20 போட்டிக்கு முன் போட்டோ ஷூட்.. உற்சாக வெள்ளத்தில் இந்திய வீரர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.