ETV Bharat / state

பள்ளி மாணவி விஷமருந்தி தற்கொலை: காதலனை தேடும் காவல்துறை

மதுரை: திருமங்கலம் அருகே வேறு பெண்ணை திருமணம் செய்யப் போவதாகக் காதலன் கூறியதை அடுத்து, பள்ளி மாணவி மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

பள்ளி மாணவி தற்கொலை
பள்ளி மாணவி தற்கொலை
author img

By

Published : Jul 15, 2020, 10:20 PM IST

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே காண்டை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவருடைய மகள் கவிதா (16). இவர் சாத்தங்குடி கிராமத்தில் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்து 11ஆம் படிக்க உள்ளார்.

இதற்கிடையில் கவிதா அதே பகுதியைச் சேர்ந்த பணராஜ் மகன் செல்லப்பாண்டி (23) என்பவரை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. செல்லப்பாண்டி சரக்கு வேன் ஓட்டுநராக உள்ளார்.

இவர்களின் காதல் விவகாரம் கவிதா வீட்டிற்குத் தெரியவந்ததை அடுத்து கவிதாவின் பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இந்நிலையில் நேற்று ( ஜூலை 14) செல்லப்பாண்டி கவிதாவிடம் தன்னை திருமணம் செய்து கொள், இல்லை என்றால் நான் வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன் எனக் கூறி உள்ளார்.

இதனால் மனமுடைந்த கவிதா அரளி விதையை அரைத்து அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த சிந்துபட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கவிதாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கவிதாவின் பெற்றோர் தன்னுடைய மகள் சாவிற்கு காரணமான செல்லப்பாண்டியை கைது செய்ய வேண்டும் என, காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் செல்லப்பாண்டியைக் காவலர்கள் தேடி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.