மதுரை: முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில், மார்கழி மாத கிரிவல பூஜையானது கரோனா நோய் தொற்று காரணமாக ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாத பௌர்ணமி கிரிவலம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் வரும் டிசம்பர் மாதம் 29ஆம் தேதி நடைபெற இருந்த மார்கழி மாத பௌர்ணமி கிரிவல பூஜையானது கரோனா பெருந்தொற்று காரணமாக மக்கள் கூட்டத்தைத் தவிர்க்கும் வகையில் ரத்து செய்யப்படவுள்ளது. எனவே மக்கள் கிரிவலம் செல்லவேண்டாம். மலைப் பாதையில் கூட்டம் கூடுவதை தவிர்க வேண்டும் என அறிவுறுத்தப்படுவதாக" குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: மண்டல பூஜைக்கு தயார் நிலையில் சபரிமலை