மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள திருநகர் மின்வாரிய அலுவலகத்தில் உதவி மின் பொறியாளராக கிருஷ்ணமூர்த்தி என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இவர், விளாச்சேரி பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் கட்டிய புதிய வீட்டிற்கு மின் இணைப்பு வழங்குவதற்கு ரூ.25 ஆயிரம் பணத்தை லஞ்சமாக கேட்டுள்ளார்.
அந்தப் பணத்தை ரவி கொடுக்க மறுத்ததால், அவரது வீட்டுக்கு மின் இணைப்பு வழங்காமல் இழுத்தடித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக மின் இணைப்புக்கு விண்ணப்பித்தும் மின் இணைப்பு கிடைக்காத விரக்தியில், கூலித் தொழிலாளி ரவி மின்வாரிய அலுவலகம் முன்பு நேற்று உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர், அவரை மீட்டனர். இதையடுத்து அவரது உடலில் தண்ணீர் ஊற்றி அவரிடம் விசாரணை நடத்தினர்.
பட்டப்பகலில் மின்வாரிய அலுவலகம் முன்பு கூலித்தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: தென்காசியில் கடைகளின் திறப்பு நேரத்தைக் குறைத்த வியாபாரிகள்!