அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 2020 ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இந்தச் சிறப்புப் பூஜையில் உற்சவர் சன்னதியிலுள்ள முருகன், தெய்வானைக்குச் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. மேலும் பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் கோயிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து மனமகிழ்ச்சியடைந்தனர்.
புத்தாண்டையொட்டி அதிகாலை முதலே ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து மகிழ்ச்சியாகப் புத்தாண்டை வரவேற்றனர்.
இதையும் படிக்க: சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனம் - கொடியேற்றத்துடன் தொடக்கம்