நாடு முழுவதும் கரோனா தொற்று அதிகளவில் பரவிவரும் சூழ்நிலையில் தமிழ்நாடு அரசு நாளை (மே. 10) முதல் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
இந்தச் சூழலில், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மே 12ஆம் தேதி நடைபெறவுள்ள கார்த்திகை திருவிழா, மே 16ஆம் தேதி நடைபெறவிருந்த வைகாசி வசந்த உற்சவ திருவிழா, மே 25ஆம் தேதி நடைபெறவிருந்த வைகாசி விசாக பால்குடம், மே 26ஆம் தேதி நடைபெறவிருந்த பௌர்ணமி கிரிவலம் ஆகியவை ரத்து செய்யப்படுவதாக கோவில் கண்காணிப்பாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வரும் நாள்களில் கரோனா தொற்று குறையும் பட்சத்தில் பக்தர்களின்றி உள் திருவிழா நடைபெறுவதற்கான முடிவுகள் எடுக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: எளிய முறையில் ரமணரின் ஆராதனை விழா