கரோனா வைரஸ் தொற்று தாக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் அத்தியாவசிய பொருள்களின் தட்டுப்பாடு பொதுமக்களுக்கு ஏற்படாதவாறு தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க சந்தைகளில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக பொருளை வாங்கி செல்கின்றனர்.
இதனால் கரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதால் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக மதுரை திருப்பரங்குன்றம் சுற்று வட்டாரப் பகுதிகளில் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் 100 ரூபாய்க்கு 15 வகை காய்கறிகளைக் கொண்ட தொகுப்புகளை வீதிதோறும் வாகனத்தில் சென்று விற்பனை செய்து வருகின்றனர். குறைந்த விலையில் 15 வகையான காய்கறி அடங்கிய தொகுப்பினை விற்பனை செய்துவருவதால் பொதுமக்கள் அதனை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.