ETV Bharat / state

‘கீழடிக்காக மத்திய அரசிடம் உதவி கேட்பது தமிழர்களின் தன்மானத்துக்கு இழுக்கு’ - thirumurugan gandhi

மதுரை: கீழடி ஆறாம் கட்ட அகழாய்விற்கு மத்திய அரசிடம் உதவி கேட்பது தமிழர்களின் தன்மானத்துக்கு இழுக்கானது என்று மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.

thirumuragan-gandhi keezhadi
author img

By

Published : Oct 7, 2019, 7:45 PM IST

கீழடி ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகளை பார்வையிடுவதற்காக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கீழடிக்கு வருகை தந்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘கீழடி அகழாய்வில் ஈடுபட்டுவரும் தொல்லியல் ஆய்வாளர்களுக்கும், அறிஞர்களுக்கும் தமிழ் சமூகம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளது. இந்த இடத்தில் பெறப்பட்ட பொருட்களைக் கொண்டு கள அருங்காட்சியகம் அமைப்பதற்கான முயற்சிகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும். அதேபோன்று முதல் மூன்று கட்ட அகழாய்வுகளில் ஈடுபட்ட மத்திய தொல்லியல் துறையிடம் இருந்து அதற்கான அறிக்கையை உடனடியாகப் பெற வேண்டும்.

மத்திய பாஜக அரசின் பிடியில் உள்ள இந்திய தொல்லியல் துறை, கீழடியில் கைப்பற்றப்பட்ட பொருட்களுக்கு ஆரிய சாயல் பூசுவதற்கு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்து மத அடையாளச் சின்னங்கள் கீழடியில் கிடைத்திருப்பதாகவும் பல்வேறு பொய் பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறது.

திருமுருகன் காந்தி செய்தியாளர் சந்திப்பு

தொல்லியல் ஆய்வறிஞர்கள் அஸ்கோ பர்போலா மற்றும் நொபுரு கராஷிமா போன்றவர்கள் சிந்து சமவெளி நாகரீகத்தை திராவிட நாகரீகம் என்று அறிவித்தனர். திராவிட நாகரிகம் என்பதும் தமிழர் நாகரிகம் என்பதும் வேறு வேறு அல்ல இரண்டும் ஒன்றுதான்.

கீழடி அகழாய்வு களத்தில் கள அருங்காட்சியகம் அமைப்பதற்கும் ஆறாம் கட்டமாக அகழாய்வு தொடங்குவதற்கும் தமிழ்நாடு அரசு, மத்திய அரசின் உதவியை கோரவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இவ்வாறு மத்திய அரசிடம் உதவிகேட்பது தமிழர்களின் தன்மானத்திற்கு இழுக்கானது. கீழடி அகழாய்வைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கான நிதி பலம் தமிழ்நாடு அரசிடம் உள்ளது. அவ்வாறு இல்லாவிட்டால் தமிழ்நாடு மக்களிடம் அதற்குரிய நிதியைப் பெறலாம். எக்காரணத்தைக் கொண்டும் மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு உதவி பெறக்கூடாது.

திருமுருகன் காந்தி செய்தியாளர் சந்திப்பு

முதல் மூன்று கட்டங்களாக நடைபெற்ற அகழாய்வின் அறிக்கையை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும். அதேபோல் கீழடியில் கள அருங்காட்சியகம் அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும். இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு தமிழ்நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுக்கும்' என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: கீழடி தமிழர் வரலாற்றை மறைக்க மத்திய அரசு முயற்சி - திருமாவளவன் குற்றச்சாட்டு

Intro:கீழடி அகழாய்வில் மத்திய அரசின் உதவியை தமிழகம் கோரக் கூடாது - திருமுருகன் காந்தி

கீழடி ஆறாம் கட்ட அகழாய்விலும் கலை அருங்காட்சியகம் அமைப்பதிலும் மத்திய அரசின் உதவியை தமிழக அரசு ஒரு போதும் கேட்டுப் பெறக் கூடாது. இது தமிழர்களின் தன்மானத்துக்கு இழுக்காகும் என்று மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேட்டி
Body:கீழடி அகழாய்வில் மத்திய அரசின் உதவியை தமிழகம் கோரக் கூடாது - திருமுருகன் காந்தி

கீழடி ஆறாம் கட்ட அகழாய்விலும் கலை அருங்காட்சியகம் அமைப்பதிலும் மத்திய அரசின் உதவியை தமிழக அரசு ஒரு போதும் கேட்டுப் பெறக் கூடாது. இது தமிழர்களின் தன்மானத்துக்கு இழுக்காகும் என்று மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேட்டி

கீழடி ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகளை பார்வையிடுவதற்காக மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வருகை தந்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், கீழடி அகழாய்வு ஈடுபட்டுவரும் தொல்லியல் ஆய்வாளர் களுக்கும் அறிஞர்களுக்கும் தமிழ் சமுகம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளது. மேலும் இந்த இடத்தில் பெறப்பட்ட பொருட்களை கொண்டு களஅருங்காட்சியகம் அமைப்பதற்கான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அதேபோன்று முதல் மூன்று கட்ட அகழாய்வுகளில் ஈடுபட்ட மத்திய தொல்லியல் துறையிடம் இருந்து அதற்கான அறிக்கையை உடனடியாக பெற வேண்டும். மத்திய தொல்லியல் துறையிடம் உள்ள கீழடி அகழாய்வு பொருட்களை உடனடியாக தமிழக அரசு பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு இங்கு அமைக்கப்பட உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த வேண்டும்.

மத்திய பாஜக அரசின் பிடியில் உள்ள இந்திய தொல்லியல் துறை கீழடி அகழாய்வு ஆரியம் பயன்படுத்துவதற்கு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது அதன் ஒரு பகுதியாகத்தான் இந்து மத அடையாளச் சின்னங்கள் இங்கு கிடைத்ததாக பல்வேறு பொய் பிரச்சாரங்களை அது மேற்கொண்டு வருகிறது. மத்திய தொல்லியல் துறை இங்கு அகழ்வாய்வு பணிகளை கைவிட்ட போது, மே17 உள்ளிட்ட தோழமை இயக்கங்களின் மூலமாக நடைபெற்ற போராட்டங்களால் தான் தமிழக தொல்லியல் துறை எதனை கையில் எடுக்க வேண்டிய நிலை உருவானது.

தொல்லியல் ஆய்வறிஞர்கள் அஸ்கோ பர்போலா மற்றும் நொபுரு கராஷிமா போன்றவர் சிந்து சமவெளி நாகரீகத்தை திராவிட நாகரிகம் என்று அறிவித்தனர். ஆனால் அதையே ஆரிய மயமாக்க இங்கு உள்ளவர்கள் பெரும்பாடு பட்டனர். திராவிட நாகரிகம் என்பதும் தமிழர் நாகரிகம் என்பதும் வேறு வேறு அல்ல இரண்டும் ஒன்றுதான்.

கீழடி அகழாய்வு களத்தில் கள அருங்காட்சியகம் அமைப்பதற்கும் ஆறாம் கட்டமாக அகழாய்வு துவக்குவதற்கும் தமிழக அரசு, மத்திய அரசின் உதவியை கோரவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. என தமிழக அரசு கைவிட வேண்டும் கீழடி அகழாய்வு பொறுத்தவரை தொடர்ந்து மேற்கொள்வதற்கான நிதி பலம் தமிழக அரசிடம் உள்ளது அவர் இல்லாவிட்டால் தமிழக மக்களிடம் அதற்குரிய நிதியை பெறலாம். எக்காரணத்தை முன்னிட்டும் மத்திய அரசிடம் தமிழக அரசு உதவி பெறக்கூடாது.

முதல் மூன்று கட்டம் நடைபெற்ற மத்திய அரசின் அகழாய்வு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் அதே போன்று இந்த இடத்திலேயே கள அருங்காட்சியகம் அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அவர் செய்ய தவறினால் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு மற்றும் அதன் தோழமை அமைப்புகள் இணைந்து தமிழகம் தழுவிய அளவில் போராட்டங்களை முன்னெடுப்போம்.

கள ஆய்வுக்காக நிலங்களை கொடுத்த நில உரிமையாளர்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணங்களை வழங்குவதுடன் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் தமிழக அரசு முன்வர வேண்டும். இந்த கோரிக்கையையும் நிறைவேற்றப்படாவிட்டால் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு போராட்டத்தை முன்னெடுக்கும் என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.