மதுரை விமான நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, "சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை வழங்கிய மக்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அசாம், புதுச்சேரி ஆகிய இரண்டு மாநிலங்களைத் தவிர மேற்குவங்கம், தமிழ்நாடு, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களிலும் பாஜக கூட்டணிக் கட்சிகளுக்கு மக்கள் மரண அடி கொடுத்து பாடம் புகட்டி உள்ளனர்.
விடுதலைச் சிறுத்தைகளை ஒரு குறிப்பிட்ட அடையாளத்துக்குள் முடக்கி தனிமைப்படுத்திட முயற்சித்த சாதிய மதவாத சக்திகளுக்கு பாடம் புகட்டும் கூடியவகையில், இந்த வெற்றியை வழங்கிய மக்களுக்கு எனது சிறப்பான நன்றி.
திமுக ஆட்சி முன்னெடுக்க கூடிய அனைத்து முயற்சிகளுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் முழுமையான ஒத்துழைப்பை நல்கும்.
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தொடர்பான இட ஒதிக்கீடு முடிவுகளை மாநில அரசுகள் மேற்கொள்ள இயலாது என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கிய இந்த சூழலில், தமிழ்நாடு அரசு இந்த தீர்ப்பை எதிர்த்து உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: சட்டப்பேரவைத் தேர்தல்களில் பெண் வேட்பாளர்கள் ஏன் அதிகளவில் முன்னிறுத்துவதில்லை?