ETV Bharat / state

வீட்டு உபயோகப் பொருள்களைத் திருடிச் சென்ற நபர் : காவல்துறை விசாரணை - மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை : ஐயர் பங்களா பகுதியில் செயல்பட்டு வரும் வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை அங்காடியில் நுழைந்து, அங்கிருந்த பொருள்களைத் திருடிச்சென்ற அடையாளம் தெரியாத நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

thief-stole-home-appliances-police-investigation

author img

By

Published : Nov 24, 2020, 8:21 PM IST

மதுரை, ஐயர் பங்களா பகுதியில் வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை செய்யும் அங்காடி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று (நவ.23) இரவு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் நிதானமாக வாசலில் வாகனத்தை நிறுத்திவிட்டு கடையின் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே நுழைந்தார்.

தொடர்ந்து அந்தக் கடையில் இருந்த வீட்டுக்குத் தேவையான மிக்ஸி, செல்போன், டார்ச் லைட், வீட்டு உபயோகப் பொருள்கள், கல்லாவில் இருந்த பணம் உள்ளிட்டவற்றை திருடிக்கொண்டு தப்பி சென்றார். இந்நிலையில், காலையில் அக்கடையின் உரிமையாளர் கடையைத் திறந்து பார்த்தபோது பொருள்கள் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.

வீட்டு உபயோகப் பொருள்களை திருடிச் சென்ற நபர் - காவல்துறை விசாரணை

இதனையடுத்து கடையின் உரிமையாளர் தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் விசாரணையின் ஒரு பகுதியாக கடையிலிருந்து கைப்பற்றிய சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது, அதில் இளைஞர் ஒருவர் கடையின் பின்பக்கக் கதவு வழியாக உள்ளே நுழைந்து பொருள்களைத் திருடிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதனடிப்படையில் காவல் துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:4 வயது குழந்தைக்குப் பாலியல் தொல்லை : வாட்ச்மேன் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.