ETV Bharat / state

தொழிலதிபரின் வீட்டில் நகை, பணம் திருட்டு - குற்றவாளி கைது

author img

By

Published : Jul 6, 2022, 9:56 AM IST

மதுரையில் தொழிலதிபரின் வீட்டிற்குள் புகுந்து நகை, பணம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றவரை காவல் துறையினர் கைது செய்துள்ள நிலையில் மற்றொருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொழிலழதிபரின் வீடில் திருடிய நபரை 13 மணிநேரத்தில் பிடித்த போலீஸ்

மதுரை: வசந்த நகர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாச சங்கர நாராயணன் (55). இவர் கேட்டரிங் சர்வீஸ் நடத்தி வருகிறார். இவர் ஜூலை 2ஆம் தேதி உறவினர் திருமணத்திற்காக குடும்பத்துடன் திருச்சி சென்றார். அதன் பிறகு ஜூலை 3ஆம் தேதி இரவு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தொடர்ந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கர் திறக்கப்பட்டு அதில் இருந்த தங்க நகைகள் மற்றும் பணம் திருடப்பட்டிருந்து தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து மதுரை சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் திருட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அவர்கள் மேற்கொண்ட தீவிர விசாரணையில் சம்பவத்தில் ஈடுபட்டது மதுரை எல்லீஸ் நகர் பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன் மற்றும் கணேசன் என்பது தெரியவந்தது.

மீட்கப்பட்ட நகைகள்

இதனையடுத்து எல்லீஸ் நகர் பகுதியில் பதுங்கியிருந்த பாண்டியராஜன் என்பவரை காவல் துறையினர் பிடித்து விசாரித்ததில் சம்பந்தப்பட்ட வீட்டில் இருவரும் பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடித்ததை ஒப்புக் கொண்டார். தொடர்ந்து அவரிடம் இருந்து 8.5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 29 சவரன் நகையும் மீட்கப்பட்டது.

மேலும் தலைமறைவாகி உள்ள கணேசனை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இதையடுத்து சம்பவம் நடந்து 13 மணி நேரத்திற்குள் சிறப்பாக செயல்பட்ட தனிப்படை காவலர்களை மதுரை ஆணையாளர் செந்தில்குமார் வெகுவாக பாராட்டினார்.

இதையும் படிங்க: பட்டப்பகலில் தள்ளுவண்டி கடையில் 5,000 ரூபாயை திருடி சென்ற மர்ம நபர் - சிசிடிவி காட்சி...

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.