ETV Bharat / state

மதுரை நாட்டு வெடிகுண்டு விவகாரத்தில் பிடிபட்ட இளைஞர் பகீர் தகவல்! - மகாலட்சுமிபுரம்

மதுரை: மகாலட்சுமிபுரம் ரயில்வே தண்டவாளத்தில் வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில், வீட்டில் நாட்டு வெடிகுண்டுகளை வைத்திருந்த இளைஞர் ஒருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

The police arrested a youung man in madurai bomb blast issue
author img

By

Published : Mar 17, 2019, 2:28 PM IST

மதுரை மாவட்டம் மகாலட்சுமிபுரம் பகுதியில் கடந்த சனிக்கிழமை மதுரை - போடி தண்டவாளம் அருகே பயங்கர சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டு வெடித்தது. அந்த சத்தம் கேட்டுஅதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்ற போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய்களின் உதவியுடன் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

வெடித்து சிதறிய நாட்டு வெடிகுண்டு துகள்களையும், தடயங்களையும் கைப்பற்றிய போலீசார், அப்பகுதியில் குப்பை கொட்டிய முத்து என்ற முதியவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவரது பேரன் பிரவீன் குமார் வீட்டில் வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்ததும், இவர் அதை நாட்டு வெடிகுண்டு என தெரியாமல் தண்டாவளத்தில் குப்பையோடு குப்பையாக கொட்டியதும் தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து போலீசார் நேற்று பிரவீன் குமாரை கைது செய்து விசாரணை நடத்திய போது, மதுரையைச் சேர்ந்த பிள்ளையார் கணேசன் என்ற எதிர் கோஷ்டியைச் சேர்ந்த நபர் ஒருவரை கொலை செய்வதற்காகவே நாட்டு வெடிகுண்டுகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

பின்னர் பிரவீன் குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவரை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

வெங்கடேஷ்வரன்
மதுரை
16.03.2019

*மதுரையில் தண்டவாளம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்த விவகாரம் - ரவுடி கும்பலை கொல்ல சதித்திட்டம் பிடிபட்ட இளைஞர் பகீர் தகவல்*

மதுரை மகாலட்சுமிபுரம் பகுதியில் கடந்த சனிக்கிழமை மதுரை போடி தண்டவாளம் அருகே பயங்கர சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டு வெடித்தது,

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தடயங்களை சேகரித்து அந்த பகுதியில் குப்பை கொட்டிய முத்து என்ற முதியவரை பிடித்து விசாரணை செய்ததில் அவருடைய பேரன் பிரவீன்குமார் வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது,

அதனை தொடர்ந்து நேற்று பிரவீன் குமாரை கைது செய்த காவல்துறையினர்,

தொடர்ந்து நடத்திய விசாரணையில் மதுரை சேர்ந்த பிள்ளையார் கணேசன் என்ற எதிர் கோஷ்டியை சேர்ந்த ஒருவரை கொலை செய்வதற்காகவே நாட்டு வெடிகுண்டு  வைத்திருந்ததாகவும்,

அதனை தெரியாமல் தன்னுடைய தாத்தா குப்பை என கருதிய தண்டவாளத்தை வீசியதால் இவன் சிக்கியது தெரியவந்துள்ளது,

அதனைத் தொடர்ந்து அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Visual send in ftp
Visual name : TN_MDU_2_17_THE COUNTRY BOMB EXPLODED_TN10003

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.