ETV Bharat / state

தவறான சிகிச்சையால் கேட்புத்திறன் இழந்த பெண்: மருத்துவ இயக்குநர் பதிலளிக்க உத்தரவு - பெண்ணிற்கு இழப்பீடு கோரிய வழக்கு

மதுரை: அரசு மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் செவிகளின் திறனை இழந்த பெண் ஒருவர், இழப்பீடு வழங்கக்கோரி தொடுத்திருந்த வழக்கில், மருத்துவத்துறை இயக்குநர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் ஆகியோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.

மருத்துவத் துறை இயக்குனர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
author img

By

Published : Oct 4, 2019, 8:56 AM IST

மதுரை சம்மட்டிபுரத்தை சேர்ந்த புஷ்பவள்ளி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில் கடந்த 27. 06. 2017 அன்று தனது இரு காதுகளிலும் கடுமையான வலி ஏற்பட்டதால், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றேன். அங்கு என்னை பரிசோதித்த மருத்துவர்கள் எவ்வித பிரச்னையும் இல்லை எனக் கூறி வெறும் மருந்துகள் கொடுத்து அனுப்பிவைத்தனர்.

ஆனால் 11.07.2017இல் மீண்டும் கடுமையாக வலி ஏற்பட்டதால், தொடர்ந்து அதே மருத்துவமனைக்கு சென்றேன். அப்போது எனது வலது பக்க காதில் அறுவை சிகிச்சை செய்தனர். சிகிச்சைக்கு பின்னர் எனது வலது பக்க காதின் கேட்கும் திறன் முற்றிலுமாக குறைந்தது.

அதிலிருந்து ஒரு ஆண்டுக்கு பின் தனது இடது பக்க காதில் அதிக வலி ஏற்பட்டது. அப்போதும் அதே மருத்துவமனைக்கு சென்றேன், முன்னர்போலவே இடது பக்க காதின் கேட்கும் திறனும் முற்றிலுமாக குறைந்தது. இதனையடுத்து தனக்கு மேல் சிகிச்சையளிக்குமாறு மருத்துவர்களிடம் கேட்டேன். ஆனால் அவர்கள் தன்னை மருத்துவமனையிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றிவிட்டனர்.

தனக்கு மேல் சிகிச்சை அளிக்காததால், தற்போது நான் கேட்கும் திறன் இல்லாமலும், வலியோடும் வாழ்ந்து வருகிறேன். எனவே தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், தனது மருத்துவ குறைபாட்டிற்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவின் மீதான விசாரணை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி கோவிந்தராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி இதுகுறித்து, மருத்துவத்துறை இயக்குநர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக செய்யப்படுகிறது - அமைச்சர் விஜயபாஸ்கர்

Intro:தவறான சிகிச்சை காரணமாக செவித்திறன் குறைந்த பெண்ணின் இழப்பீடு கோரிய வழக்கில் மருத்துவத் துறை இயக்குனர் பதிலளிக்க உத்தரவு

தவறான சிகிச்சையால் தனது இரு செவிகளின் திறன் இழந்ததாகவும், சிகிச்சை குறைபாட்டிற்கு உரிய இழப்பீடு வழங்கவும் கூறி, தொடரப்பட்ட வழக்கில் மருத்துவத்துறை இயக்குனர், மற்றும் அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவு .Body:தவறான சிகிச்சை காரணமாக செவித்திறன் குறைந்த பெண்ணின் இழப்பீடு கோரிய வழக்கில் மருத்துவத் துறை இயக்குனர் பதிலளிக்க உத்தரவு

தவறான சிகிச்சையால் தனது இரு செவிகளின் திறன் இழந்ததாகவும், சிகிச்சை குறைபாட்டிற்கு உரிய இழப்பீடு வழங்கவும் கூறி, தொடரப்பட்ட வழக்கில் மருத்துவத்துறை இயக்குனர், மற்றும் அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவு .

மதுரை சம்மட்டிபுரத்தை சேர்ந்த புஷ்பவள்ளி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், நான் கடந்த 27. 06. 2017 அன்று எனது இரு காதுகளிலும் கடுமையான வலி ஏற்பட்டதால், மதுரை அரசு ராஜாஜி, மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சென்றேன். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் எவ்வித பிரச்னையும் இல்லை எனக் கூறி வெறும் மருந்துகள் கொடுத்து அனுப்பி வைத்தனர்.

ஆனால் 11 .07.2017ல் மீண்டும் கடுமையாக வலி ஏற்பட்டதால், மீண்டும் மருத்துவ மனைக்கு சென்றேன். அப்போது எனது வலது பக்க காதில் அறுவை சிகிச்சை செய்தனர். ஆனால் எனது வலது பக்க காதின் கேட்கும் திறன் முற்றிலுமாக இழந்தது.

இந்த நிலையில் ஒரு ஆண்டு கழிந்த நிலையில், எனது இடது பக்க காதிலும், கடுமையாக வலி ஏற்பட்டது.
இதனையடுத்து கடந்த 11.08.2018 அன்று எனக்கு மீண்டும், இடது பக்க காதில், அறுவை சிகிச்சை மேற் கொள்ளப்பட்டது. அதில் எனது செவித்திறன் முற்றிலுமாக பாதிக்க பட்டதுடன், எனது காதில் இருந்து சீழும் , ரத்தமும் கசிந்து கொண்டிருந்தது. எனது இரு காதுகளின் கேட்கும் திறன் பாதிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து சிகிச்சை யளிக்க நான் கேட்டுக் கொண்டும் என்னை ஆஸ்பத்திரியில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி விட்டனர்.

எனக்கு மேல் சிகிச்சை அளிக்காததால், தற்போது நான் கேட்கும் திறன் இல்லாமலும், வலியோடும் வாழ்ந்து வருகிறேன். எனவே எனக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், எனது மருத்துவ குறைபாட்டிற்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதி கோவிந்தராஜ் முன்னிலையில், விசாரணைக்கு வந்தது.இதனை விசாரித்த நீதிபதி இது குறித்து, மருத்துவத்துறை இயக்குனர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.