ETV Bharat / state

தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுக்களைத் தடுப்பதற்கான வழிமுறைகள்; அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுக்கள் கிடைப்பதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து மத்திய, மாநில அரசுகளும், வழக்கறிஞர்களும் தரவுகளுடன் அறிக்கையாக தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுக்களைத் தடுப்பதற்கான வழிமுறைகள்

author img

By

Published : Oct 13, 2022, 1:47 PM IST

மதுரை: உயர் நீதிமன்ற மதுரைக்கிளை VPN செயலியை முறைப்படுத்துவது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்காக எடுத்துள்ளது. இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பதிவாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்,"ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை ஒன்றில் மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு அடிமையாக இருந்தது தெரியவந்தது.

நமது நாடு இளம் தலைமுறையினரின் கைகளிலேயே உள்ளது. நாட்டின் முன்னேற்றத்திற்கு இளம் தலைமுறையினரின் உளவியல், உடல், பொருளாதாரம், சமூக அளவில் திறன் படைத்தவர்களாக இருப்பது அவசியம். ஆனால் அவற்றை வளர்த்துக்கொள்வதற்குப் பதிலாக, இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டுக்களை விளையாடுவது, சமூக வலைதளங்களில் நேரங்களை செலவிடுவது போன்றவற்றில் கவனம் செலுத்துகின்றனர்.

ஆகவே இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டுக்களை தடுப்பதும் அவற்றிலிருந்து இளைஞர்களை மீட்பதும் அவசியமான ஒன்று. இந்த விஷயத்தை கவனத்தில் கொண்டே, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இதனை பொதுநல வழக்காக தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. VPN செயலிகளை முறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தடை செய்யப்பட்ட விளையாட்டுக்கள், செயலிகளை பதிவிறக்கம் செய்வது தொடர்பாக வீடியோக்களை வெளியிடும் யூ-ட்யூப் சேனல்களை முறைப்படுத்த வேண்டும். தடை செய்யப்பட்ட விளையாட்டுக்களை விளையாடக் கூடாது என்பது தொடர்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைய தலைமுறையினரிடம் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு,"பப்ஜி, free fire போன்ற தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு அடிமையாவது இளம் தலைமுறையினர் குழந்தைகளிடையே கடும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிகளை மட்டுப்படுத்த இயலாது ஆனால் இளையோர் அவற்றை சரியான முறையில் பயன்படுத்துவது உறுதிப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தனர்.

அரசு தரப்பில்,"பப்ஜி, free fire போன்ற விளையாட்டுக்களை இளைஞர்கள் விளையாடக் கூடாது என்பதில் தமிழ்நாடு அரசும் உறுதியாக உள்ளது. தற்போது கூட ஆன்லைன் ரம்மி விளையாட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளன" எனத் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து நீதிபதிகள்," வழக்கறிஞர் சமுதாயம் உலகையே மாற்றும் ஆற்றல் பெற்றது. ஆகவே இந்த வழக்கு தொடர்பாக வழக்கறிஞர்கள் விவரங்களைத் தாக்கல் செய்யலாம்'' என குறிப்பிட்டனர். தொடர்ந்து,"தடை செய்யப்பட்ட விளையாட்டுக்கள் கிடைப்பதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து மத்திய, மாநில அரசுகளும், வழக்கறிஞர்களும் தரவுகளுடன் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: ஹிஜாப் மேல்முறையீட்டு வழக்கில் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.