ETV Bharat / state

சிறுபான்மை கல்வி நிலையங்கள் கல்வித்துறை அனுமதி பெற்றே ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்: நீதிமன்றம் - ஆசிரியர் நியமன ஒப்புதல்

சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணியிடங்களை கல்வித் துறையிடம் முன் அனுமதி பெற்ற பிறகே நிரப்ப வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணியிடங்களுக்கு கல்வித் துறையிடம் முன் அனுமதி பெற்று நிரப்பப்பட வேண்டும்

author img

By

Published : Jun 12, 2023, 10:23 PM IST

மதுரை: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ஜேசுபிரபா. இவர் 2014-ல் ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டார். இவரது நியமனத்தை அங்கீகரிக்கக் கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் பள்ளிக்கல்வித்துறையின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது.

இவரது நியமனத்தை 2017ஆம் ஆண்டில் அங்கீகரித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. இவரது நியமனத்தை 2014 முதல் அங்கீகரித்து சம்பள பாக்கி மற்றும் பணப்பலன்களை வழங்கக்கோரி, ஜேசுபிரபா உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு ஏற்கப்பட்ட நிலையில், 2014 முதல் நியமனத்தை அங்கீகரிக்குமாறு தனி நீதிபதி 2019 ஆம் ஆண்டில் உத்தரவிட்டார். இதை எதிர்த்து பள்ளிக்கல்வித்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை மறுசீராய்வு செய்யக்கோரி பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உயர் நீதிமன்ற கிளையில் சீராய்வு மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்து நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஆர்.தாரணி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (ஜூன் 12) உத்தரவை பிறப்பித்தது. அதில், “ஆசிரியர்களுக்கு அரசு கருவூலத்தில் இருந்து ஊதியம் கொடுக்கப்படுகிறது. அதே நேரத்தில் பணி நியமனங்கள் அந்தந்த திருமறை மாவட்டங்கள் பராமரித்து வரும் பதிவு, மூப்பு பட்டியல் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு திருமறை மாவட்டங்களும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு இணையான பதிவேட்டை பராமரித்து வருகின்றன.

இந்த நியமனங்களை ஆய்வு செய்தால் பணி நியமனம் பெற்றவர்கள் ஒரே மதத்தை சேர்ந்தவர்களாகவும், ஒரே மதப் பிரிவை சேர்ந்தவர்களாகவும் இருப்பர். கல்வித்துறை உபரி ஆசிரியர் பிரச்சினையை சந்தித்து வருகிறது. அதே நேரத்தில் இந்த நிர்வாகங்கள் ஒரு பள்ளியில் காலியிடம் ஏற்பட்டால் உடனடியாக நிரப்புகின்றன. அவர்கள் இன்னொரு பள்ளியில் உபரி ஆசிரியர்கள் இருப்பதை கண்டுகொள்வதில்லை. எனவே எதிர்காகலத்தில் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் ஆசிரியர் பணியிடங்களை கல்வித் துறையிடம் முன் அனுமதி பெற்ற பிறகே நிரப்ப வேண்டும்.

அதே நேரத்தில் பணி நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கக்கோரி நிர்வாகம் அனுப்பும் பரிந்துரைகளை காரணம் இல்லாமல் நீண்ட காலம் நிலுவையில் வைத்திருப்பதை ஏற்க முடியாது. ஆசிரியர் நியமன ஒப்புதல் தொடர்பாக கல்வி நிறுவனங்களிடம் இருந்து பரிந்துரை வந்தால் அந்த பரிந்துரை மீது 10 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும் இந்த வழக்கில் தனி நீதிபதி உத்தரவிலும், அமர்வு உத்தரவிலும் தலையிட வேண்டியதில்லை என்பதனால் மறுசீராய்வு மனு முடிக்கப்படுகிறது” என்று நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க: பார்களை மூடிவிட்டால் அரசுக்கு வருவாய் இழப்பு: தமிழக அரசு மேல்முறையீடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.