ETV Bharat / state

New Year: மதுரையில் பூக்களின் விலை உயர்வு - flowers price of has increased

மதுரையின் தனிச்சிறப்பு மிக்க மல்லிகைப் பூ புத்தாண்டை முன்னிட்டு ரூ.1800-க்கு விற்பனையாகிறது. அதேபோல முல்லை, பிச்சி உள்ளிட்ட பூக்களில் விலையும் அதிகரித்துள்ளது.

New Year's Eve: மதுரையில் மல்லிகை பூக்களின் விலை உயர்வு!

author img

By

Published : Dec 31, 2022, 1:36 PM IST

New Year's Eve: மதுரையில் மல்லிகை பூக்களின் விலை உயர்வு!

மதுரை: மாட்டுத்தாவணி அருகே உள்ள ஒருங்கிணைந்த மலர் வணிக வளாகத்தில் மதுரை மாவட்டம் மட்டுமன்றி, அண்டையிலுள்ள விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

நாளென்றுக்கு சராசரியாக 50 டன்னுக்கும் மேலாக பூக்கள் இங்கு விற்பனையாகிறது. குறிப்பாக மதுரையின் தனிச்சிறப்பு மிக்க மதுரை மல்லிகை வெளி மாநிலங்கள் மட்டுமன்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. புத்தாண்டை முன்னிட்டு மதுரை மல்லிகை கிலோ ரூ.1800-க்கு விற்பனையாகிறது. பிச்சி ரூ.1300, முல்லை ரூ.1300, பட்டன்ரோஸ் ரூ.220, செண்டு மல்லி ரூ.100, அரளி ரூ.300 என பிற பூக்களின் விலையும் கணிசமாக விலை உயர்ந்து காணப்படுகிறது.

இதுகுறித்து மாட்டுத்தாவணி மொத்த பூ வியாபாரிகள் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில், 'புத்தாண்டை முன்னிட்டு பூக்களின் விலையில் கணிசமாக உயர்வு காணப்படுகிறது. இந்த விலை நிலவரம் அடுத்த ஓரிரு நாட்கள் நீடிக்கும்' என்றார்.

இதையும் படிங்க: அச்சுறுத்தும் கருப்பன் யானை.. களமிறங்கும் கபில்தேவ்..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.