ETV Bharat / state

மதுரை அருகே தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல் தூண் கண்டுபிடிப்பு!

மதுரை அருகே கி.மு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட தனிச்சிறப்புமிக்க கல் தூண் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கல்தூண்
கல்தூண்
author img

By

Published : Jul 4, 2020, 6:50 PM IST

மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே உள்ளது கிண்ணிமங்கலம் கிராமம். இந்த கிராமத்திலுள்ள ஏகநாத சுவாமி மடத்தில் இருந்த கல் தூண் ஒன்றில் கி.மு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.

இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் கூறுகையில், ”ஏகநாதசுவாமி மடத்தின் உள்ளே இருந்த கல் தூண் ஒன்றில் ’ஏகன் ஆதன் கோட்டம்' என்ற தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஆண்டிப்பட்டி அருகே புலிமான் கோம்பையில் கண்டெடுக்கப்பட்ட நடு கல்லுக்கு இணையானது இந்தக் கல் தூண்.

கல் தூண் ஒன்றில் இதுபோன்ற தமிழி எழுத்துக்கள் காணப்படுவது மிக முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்பாகும். காரணம் அந்தக் காலகட்டத்தில் தமிழர்கள் பின்பற்றிய சமயம் பண்பாடு கட்டடக்கலை ஆகியவற்றை உணர்த்துவதாக இது உள்ளது. அதுமட்டுமின்றி கோட்டம் என்ற சொல் சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட தமிழ் இலக்கியங்கள் அன்றி, முதன்முதலாக தமிழ் பிராமி என்று அழைக்கப்படுகின்ற தமிழி எழுத்தாக கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மிகப் பழமை வாய்ந்த கிண்ணிமங்கலம் கிராமத்தின் பல்வேறு பகுதிகளிலும், தொல்லியல் அகழாய்வுகள் நடத்தப்பட்டால் மேலும், பல்வேறு வரலாற்றுச் சான்றுகள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது” எனக் கூறினார்.

இதையும் படிங்க: ஊரடங்கால் நிலைகுலைந்த பழங்குடி கிராமங்கள்: அத்தியாவசிய பொருள்களுக்கு அவதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.