ETV Bharat / state

நீர்நிலை ஆக்கிரமிப்பில் நீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு இருக்காது - உயர் நீதிமன்றம் - நீர்நிலைகள்

மதுரை: நீர்நிலை ஆக்கிரமிப்பில் நீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு இருக்காது என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

உயர் நீதிமன்றம் மதுரை கிளை
உயர் நீதிமன்றம் மதுரை கிளை
author img

By

Published : Jul 20, 2021, 2:25 AM IST

சிவகாசியை சேர்ந்த ஆனந்த் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், " சிவகாசி பகுதியில் வேலாயுதம் ஊரணி அமைந்துள்ளது. இந்த ஊரணியில் நுண்ணிய உர மையம் (micro compost centre) அமைப்பதற்காக சிவகாசி நகராட்சி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதனால் வேலாயுதம் ஊரணி முற்றிலுமாக அழியக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நீர்நிலைகளில் கட்டடங்கள் கட்டக்கூடாது என சட்டம் உள்ளது.

2019ஆம் ஆண்டு வேலாயுதம் ஊரணியில் நுண்ணிய உர மையம் அமைக்கக் கூடாது என விரிவான மனு தயார் செய்து சமர்ப்பித்துள்ளேன். மேலும் இதுகுறித்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டு 8 வாரங்களுக்குள் சிவகாசி நகராட்சி ஆணையர் எனது மனுவை பரிசீலிக்க உத்தரவிட்டது.

ஆனால் எனது மனு மீது உரிய முறையில் விசாரணை நடத்தாமல் மீண்டும் வேலாயுத உளரணியில் நுண்ணிய உர மையம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே வேலாயுதம் ஊரணியில் நுண்ணிய உர மையம் செயல்பட தடை விதிக்க வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ”நீர்நிலை ஆக்கிரமிப்பு குறித்து நீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு இருக்காது. பழங்கால நீர்நிலைகளை பாதுகாப்பது மாநிலத்தின் கடமை. நீர் நிலைகளுக்கும், இயற்கைக்கும் அறங்காவலராக மாநிலங்கள் இருக்க வேண்டும் என நீதிபதிகள் கூறினர்.

மேலும், சம்பந்தப்பட்ட இடம் புறம்போக்கு இடமாக மாற்றப்பட்டுள்ளது. நுண்ணிய உர மையம் அமைத்து செயல்பாட்டிற்கு வந்துவிட்டது. எனவே, நுண்ணிய உர மையத்தினால் மழைக்காலங்களில் நீர்நிலைகளில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படக்கூடாது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் குறிப்பிட்ட கால இடைவெளியில் சம்பந்தப்பட்ட இடத்தினை ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.