ETV Bharat / state

பஞ்சாயத்து தலைவர் பதவி நீக்கம்.. பஞ்சாயத்து துறை இயக்குநர் உத்தரவுக்கு இடைக்கால தடை..

புதுக்கோட்டையில் பஞ்சாயத்து தலைவர்கள் இருவரை பதவி நீக்கம் செய்து ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை இயக்குநர் பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

பஞ்சாயத்து தலைவர்கள் பதவி நீக்க உத்தரவுக்கு இடைக்கால தடை

author img

By

Published : Jan 28, 2023, 10:15 AM IST

மதுரை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர்கள் சக்திவேல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தனித்தனியே மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் அறந்தாங்கி பஞ்சாயத்து யூனியனின் நாகுடி கிராமத்து பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வருகிறேன்.

நாகுடி கிராம பஞ்சாயத்து செயலர், பஞ்சாயத்துக்குட்பட்ட பொது நிதியை பஞ்சாயத்து தலைவரான எனது கையெழுத்தை முறைகேடாக பயன்படுத்தி ரூ.50 லட்சம் மதிப்பில் முறைகேடு செய்துள்ளார். இதுதொடர்பாக அதிகாரிகளிடம் பஞ்சாயத்து செயலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை.

இந்த நிலையில் ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பஞ்சாயத்து கணக்கு வழக்குகளை சரிவர பராமரிக்கவில்லை எனக் கூறி பஞ்சாயத்து தலைவரான என்னை பதவி நீக்கம் செய்துள்ளார். இதனை ரத்து செய்தும், பஞ்சாயத்து கணக்கு வழக்குகளை தணிக்கை செய்வதற்கு குழு அமைக்க வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இதே போல் மடங்குடி பஞ்சாயத்து தலைவர் லதா பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்து ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுகள் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, "பஞ்சாயத்து தலைவர்களை பதவியில் இருந்து நீக்கம் செய்து ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை இயக்குனர் பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்தும் வழக்கு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை இயக்குனருக்கு உத்தரவிட்டும் வழக்கினை ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: பழனியில் சண்முகர்- வள்ளி தெய்வானைக்கு திருக்கல்யாணம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.