ETV Bharat / state

வெற்றிபெற்ற கையோடு திமுகவில் ஐக்கியமான அதிமுக வேட்பாளர்! - திமுக வேட்பாளர் குணாவை விட 15 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி

மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சியின் 9ஆவது வார்டில் வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர் சில மணி நேரங்களிலேயே அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

அதிமுகவில் வெற்றி அடைந்ததும் திமுகவில் இணைந்த மேலூர் 9வது வார்டு வேட்பாளர்!

author img

By

Published : Feb 22, 2022, 4:52 PM IST

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சியின் 9ஆவது வார்டில் வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர் சில மணி நேரங்களிலேயே தமிழ்நாடு அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

மதுரை மாவட்டம் மேலூர் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 9ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்காக அதிமுக சார்பில் போட்டியிட்ட அருண் சுந்தரபிரபு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் குணாவைவிட 15 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றிபெற்றார்.

இந்நிலையில், வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர் அருண் சுந்தரபிரபு சில மணி நேரத்திலேயே வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தியை நேரில் சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.

இதனால் மேலூர் நகராட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் இரண்டு இடங்களில் வெற்றிபெற்ற நிலையில், தற்போது ஒருவர் திமுகவில் இணைந்ததால், அதிமுக வேட்பாளர்களின் எண்ணிக்கை ஒன்றாகக் குறைந்தது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து திமுகவில் இணைந்து கொண்ட அதிமுக வேட்பாளர் அருண் சுந்தர பிரபு கூறும்போது, மேலூர் நகர் மன்றத் தேர்தலில் 23 திமுக வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ள நிலையில் அதிமுக சார்பில் இருவர் மட்டுமே வெற்றிபெற்றுள்ளோம். இதனால் எனக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்த வார்டு மக்களுக்கு நல்லது செய்யும்விதமாக தற்போது திமுகவில் இணைந்து கொண்டதாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஹிஜாப் சர்ச்சை: மேலூரின் 8ஆவது வார்டில் 10 வாக்குகள் பெற்ற பாஜக!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.