கரோனா வைரஸ் தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் ரயில்கள் இயக்கப்படாமல் இருந்தன. இதையடுத்து ஆறு மாதத்துக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு சென்னை - மதுரை இடையிலான தேஜஸ் ரயில் சென்னையிலிருந்து புறப்பட்டு மதுரைக்கு இன்று (அக்.2) வந்தடைந்தது.
கரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போதிருந்து ரயில்கள் எதுவும் இயக்கப்படவில்லை. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டு, தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இதைத்தொடர்ந்து இன்று முதல் ரயில் போக்குவரத்து குறிப்பிட்ட எண்ணிக்கையில் சில பகுதிகளில் மட்டும் தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
இதைத்தொடர்ந்து காலை ஆறு மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்ட தேஜஸ் ரயில் இன்று பிற்பகல் மதுரை வந்தடைந்தது. தற்போது பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டிருப்பது அடுத்தடுத்த நாள்களில் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அனுமதியின்றி நடத்தப்பட்ட கிடா சண்டை: ஓட்டம் பிடித்த போட்டியாளர்கள்...!