ETV Bharat / state

தாமிரபரணி ஆற்று மணல் கடத்தல் வழக்கு: தலைமைச் செயலர் பதிலளிக்க உத்தரவு! - Tamiraparani river

மதுரை: நெல்லை பேருந்து நிலையம் கட்டடப் பணியின்போது தாமிரபரணி ஆற்று மணல் கேரளாவிற்குச் சட்ட விரோதமாக கடத்தபட்டதாக அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

HC
HC
author img

By

Published : Sep 4, 2020, 12:01 PM IST

நெல்லையைச் சேர்ந்த சுடலைகண்ணு என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில், கடந்த 2018ஆம் ஆண்டு திருநெல்வேலி பேருந்து நிலையத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்ட திட்டமிட்டு பணிகள் நடைபெற்றன. அப்போது பேருந்து நிலையத்தில் அடிதளம் அமைக்க சுமார் 30அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டது.

பேருந்து நிலையத்திற்கு அருகே தாமிரபரணி ஆறு உள்ளதால், அப்பகுதி முழுவதும் மணல் நிறைந்த பகுதியாகும். எனவே 30 அடி பள்ளத்தில் ஆற்று மணல் இருந்தன. இதனை நெல்லை மாநகராட்சி அலுவலர்கள் சட்ட விரோதமாக கடத்த முயன்றனர். அதில் பல லோடு மணல் கேரளாவிற்கு கடத்தப்பட்டது. இது தொடர்பாக உயர் அலுவலர்களிடம் மனு அளித்த பின்பு, 30 அடி பள்ளத்தில் இருந்து எடுக்கப்பட்ட மணல் அள்ளியபோது ஏலம் விட அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து நெல்லை மாநகராட்சி அலுவலர்கள் சில அரசியல் பிரமுகர்கள் உடந்தையோடு குறைந்த மதிப்பில் ஏலம் விடப்பட்டது.

எனவே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை பேருந்து நிலையத்தில் அடித்தளம் அமைக்க 30 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டபட்ட மணல் மற்றும் களி மண்ணை சட்ட விரோதமாக நெல்லை மாநகராட்சி அலுவலர்கள் விற்பனை செய்துள்ளவர்கள் மீது சிறப்பு விசாரணை குழு அமைத்து மணல் கடத்தலுக்கு துணை போன அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நேற்று (செப்.3) நீதிபதிகள் சத்திய நாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது மனுதாரர் தரப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பேருந்து நிலையம் கட்டடப் பணியின்போது மணல் கொள்ளை நடைபெற்று உள்ளது. இதனை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும் எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் வழக்கு குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலர், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், கனிம வளத்துறை அலுவலர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.