ETV Bharat / state

'பலியான மாட்டின் உரிமையாளருக்கு தமிழ்நாடு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்' - ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை

மதுரை: அலங்காநல்லூரில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின்போது வாடிவாசலில் பின்புறம் மாடு குத்தியதில் உயிரிழந்த காளை மாட்டின் உரிமையாளர் ஸ்ரீதருக்கு தமிழ்நாடு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம் பரிந்துரைத்துள்ளார்.

Retired Justice manikam
Retired Justice manikam
author img

By

Published : Jan 17, 2020, 7:50 PM IST

உலகளவில் மிகவும் பிரசித்திப்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி மிக விறுவிறுப்புடன் கோலாகலமாக நிறைவுபெற்றது. வெற்றிபெற்ற சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காணவந்த மக்கள் காளையர்களுக்கு உற்சாகத்தை அளித்து ஜல்லிக்கட்டை கண்டுகளித்தனர்.

இதனைத்தொடர்ந்து, வீரர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டிய ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம் பேசுகையில், இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி பெரிய அளவிலான அசம்பாவிதங்களின்றி நிறைவுபெற்றுள்ளது. ஆனால், வாடிவாசலுக்கு பின்புறம் தனது சொந்த காளையை அழைத்துவரும்போது, மற்றொரு காளையால் அடிவயிற்றில் குத்தப்பட்டு ஸ்ரீதர் என்ற மாட்டின் உரிமையாளர் உயிரிழந்தார்.

அந்த வீரரின் இறப்புக்கும் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளார்.

பள்ளிக்குச் செல்லும் பாதை ஆக்கிரமிப்பு புகார்: விரைவில் நடவடிக்கை எடுக்கக்கோரி உத்தரவு!

காலை 7 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5 மணிவரை மொத்தம் எட்டு சுற்றுகளாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Intro:பலியான மாட்டின் உரிமையாளருக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் - நீதிபதி மாணிக்கம் கோரிக்கை

அலங்காநல்லூரில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின்போது வாடிவாசலில் பின்புறம் மாடு குத்தியதில் உயிரிழந்த காளை மாட்டின் உரிமையாளர் ஸ்ரீதருக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஜல்லிக்கட்டை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் கோரிக்கைBody:பலியான மாட்டின் உரிமையாளருக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் - நீதிபதி மாணிக்கம் கோரிக்கை

அலங்காநல்லூரில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின்போது வாடிவாசலில் பின்புறம் மாடு குத்தியதில் உயிரிழந்த காளை மாட்டின் உரிமையாளர் ஸ்ரீதருக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஜல்லிக்கட்டை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் கோரிக்கை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி மிக விறுவிறுப்புடன் நிறைவு பெற்றது. வெற்றி பெற்ற சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் காளைகளுக்கும் பரிசு வழங்கி பாராட்டு நிகழ்வு ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் பேசினார். அப்போது அவர், இந்த நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் இன்றி நிறைவு பெற்றுள்ளது. ஆனால் வாடிவாசலுக்கு பின்புறம் தனது சொந்த காளையை அழைத்து வரும்போது, மற்றொரு காளையால் அடிவயிற்றில் குத்தப்பட்டு ஸ்ரீதர் என்ற மாட்டின் உரிமையாளர் உயிரிழந்தார்.

அந்த வீரரின் இறப்புக்கும் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் அளிக்கும் வகையிலும் தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.

பிறகு பேசிய அவர், இன்று நடைபெற்ற போட்டியில் பதிவுசெய்யப்பட்ட மொத்த காளைகளின் எண்ணிக்கை 750. இதில் 5 மருத்துவக் காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டது போக 745 காளைகள் அனுமதிக்கப்பட்டன. இவற்றில் 739 காளைகள் களமிறங்கி விளையாடின.

அதேபோன்று 877 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்யப்பட்டனர். இதில் விளையாட அனுமதிக்கப்பட்டவர் 688 தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் 10 பேர் களத்தில் பங்கேற்காத வீரர்கள் 179 பேர்.

13 பேர் சிறிய காயங்களாலும் 17 பேர் பெரிய காயங்களாலும் பாதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் பலத்த காயம் காரணமாக மரணமடைந்தார் என்றார்.

காலை 7 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டிகள் மாலை 5 மணி வரை மொத்தம் எட்டு சுற்றுகளாக நடைபெற்றன.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.