ETV Bharat / state

மதுரை பட்டாசு ஆலை வெடி விபத்து - ஆளுநர், முதலமைச்சர் இரங்கல்! - Factory Fire

மதுரை உசிலம்பட்டி அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.

மதுரை பட்டாசு ஆலை வெடி விபத்து - ஆளுநர், முதலமைச்சர் இரங்கல்!

author img

By

Published : Nov 10, 2022, 6:12 PM IST

மதுரை: மதுரை மாவட்டம், அழகுசிறை பகுதியில் அனுசியா, வெள்ளையப்பன் என்பவருக்குச் சொந்தமாக செயல்படும் VBM பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. பட்டாசு ஆலையின் 2 வெடி மருந்து கிடங்குகளில் இருந்த பணியாளர்கள் 5 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 10க்கும் மேற்பட்டோர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், 'மதுரை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் மதிப்புமிக்க உயிர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்' என ஆளுநர் தெரிவித்ததாக ராஜ்பவன் மாளிகை ட்விட்டர் பக்கம் தெரிவித்துள்ளது.

  • தமிழக ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி, அவர்கள் மதுரை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் மதிப்புமிக்க உயிர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார் . மேலும், விபத்த்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என ஆளுநர் தெரிவித்துள்ளார்

    — RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) November 10, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாகவும், படுகாயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்கள் விரைந்து குணம் பெற வேண்டுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மதுரையில் பட்டாசு ஆலை வெடி விபத்து: 5 பேர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.