ETV Bharat / state

'ஆடி 18ஆம் தேதி ஊரடங்குத் தளர்வு வேண்டும்' - தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை! - ஊரடங்கை தளர்வு செய்ய வேண்டும்

மதுரை: வருகின்ற ஆடி 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தமிழர்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த நாளான அன்றைய தினத்தில், தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ஊரடங்கை அக்குறிப்பிட்ட நாளில் தளர்வு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆடி 18: ஊரடங்கு தளர்வு வேண்டும் - தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை

author img

By

Published : Jul 31, 2020, 9:34 PM IST

ஆடி 18ஆம் தேதி ஊரடங்கை தளர்வு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது, 'ஆடி மாதத்தில் ஒரே நல்ல நாளாகக் கருதப்படும் ஆடிப்பெருக்குத் தமிழர்களுக்கு மிக முக்கியமான நாளாகும். முழு ஊரடங்கு காரணமாக அடைக்கப்பட்ட தொழில், வணிக நிறுவனங்களை ஆடிப்பெருக்கன்று, பூஜை செய்து ஆரம்பிக்கவும், பல சுப காரியங்களை இல்ல அளவில் நடத்துவதற்கும்; ஏற்கெனவே தொழில் வணிகத் துறையினரும், பொதுமக்களும் திட்டமிட்டுள்ளனர்.

இச்சூழ்நிலையில் தமிழ்நாடு அரசு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்குத் தொடரும் என்று அறிவித்துள்ள நிலையில், ஆடிப்பெருக்கு நாளான ஆகஸ்ட் 2ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை தளர்வில்லா முழு ஊரடங்கு என்ற அறிவிப்பு பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனவே, வரும் ஞாயிற்றுக்கிழமை மட்டுமாவது மற்ற நாட்களைப் போன்று, தளர்வுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்படும் என உடனடியாக அறிவிக்க தமிழ்நாடு முதலமைச்சரை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பாக அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இதனால் கரோனா தொற்று சம்பந்தமாக மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

அத்துடன் மத்திய அரசு அறிவித்துள்ளதை ஏற்று மாநிலத்திற்குள் கார் போன்ற வாகனங்களில் செல்ல ஆகஸ்ட் முதல் நாள் முதல் இ-பாஸ் வேண்டியதில்லை என்றும் அறிவிக்க வேண்டுகிறோம். அவர்கள் நோய்த் தொற்று அதிகமாக இருக்கும் பகுதிக்குச் செல்லவும் மாட்டார்கள். அரசு அறிவித்துள்ள நிலையான நடைமுறைக் கட்டுப்பாடுகளை (Standard Operating Procedures – SOP) கடைப்பிடிக்கவும் செய்வார்கள். ஆகவே, அவர்களால் எந்தத் தொற்றும் பரவாது. இதன் மூலம் தொழில் வணிகத் துறை கொஞ்சமாவது தங்கள் பொருட்களை சந்தைப்படுத்த வழி ஏற்படும். இதற்கான ஆணையை முதலமைச்சர் உடனே பிறப்பிக்க வேண்டுகிறோம்' என அதில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.