ETV Bharat / state

143 பொருள்களின் மீது கூடுதல் ஜிஎஸ்டி வரி விதிப்பை கைவிட வேண்டும் - தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை

author img

By

Published : Apr 26, 2022, 3:11 PM IST

மத்திய அரசின் ஜிஎஸ்டி கவுன்சில் குறைந்த வரி விதிப்பில் உள்ள 143 பொருள்களின் மீது கூடுதலாக வரியை அதிகரிப்பது, தொழில் வணிகத் துறையினருக்கும், பொதுமக்களுக்கும் துரோகம் விளைவிக்கும் செயலாக இருப்பதோடு, தந்திரமான, பயங்கரமான நடவடிக்கையாகவும் அமையும் என தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

Tamil Nadu Chamber of Commerce and Industry Condemns GST Tax Rise

மதுரை: தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜெகதீசன் நேற்று (ஏப். 25) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வருவாய் நம் நாட்டில் அதிகபட்சமாக ரூ. 1.42 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது 0 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருக்கும் அப்பளம், வெல்லம் போன்ற பொருள்களுக்கு 5 விழுக்காடு வரியாக மாற்றப்பட்டுள்ளது.

18% - 28%: தோல் ஆடைகள், அணிகலன்கள், கைக்கடிகாரங்கள். ஷேவ் ரேஷர்கள், வாசனைத் திரவியங்கள், சேவ் செய்வதற்கு முன் / ஷேவ் செய்வதற்குப் பின் உபயோகப்படுத்தப்படும் பொருள்கள், சாக்லேட்டுகள், வேஃபர்ஸ், கோகோ பவுடர், மது அல்லாத பானங்கள், கைப்பைகள், ஷாப்பிங் பேக்குகள், செராமிக் சிங்க், வாஷ் பேசின், பிளைவுட் கதவுகள், ஜன்னல்கள், சுவிட்சுகள், சாக்கெட்ஸ் போன்ற மின் சாதனங்கள் 18 சதவிகித வரியில் இருந்து 28 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது.

வால்நட் பருப்புகள் 5 சதவிகிதத்தில் இருந்து 12 விழுக்காடாகவும், கஸ்டாட் பவுடர் 5 விழுகாடு வரி விதிப்பில் இருந்து 18 விழுக்காடாகவும் மாற்றப்பட்டுள்ளது. இத்தனை பொருள்களுக்கான வரிகள் மாற்றத்திற்கு ஜிஎஸ்டி கவுன்சில் முன்மொழிந்துள்ளது. மொத்தத்தில், 143 பொருள்களில் சுமார் 92 பொருள்களை 18 விழுக்காடு வரி விதிப்பில் இருந்து 28 விழுக்காடு வரி விதிப்புக்கு மாற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

பாதிப்படையும் சாமனியர்கள்: கரோனோ தொற்று நோய் தாக்கத்திற்குப் பின்பு, தொழில் வணிகத் துறை, குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை (MSMEs) மிகுந்த சிரமத்திற்கிடையே தற்போது சற்றே மீண்டு வந்துள்ளது. தொழில் வணிகத் துறையினரும், பொதுமக்களும் ஏற்கனவே 14.5 விழுக்காடு மொத்த விலை பணவீக்கத்தாலும், 7.5 விழுக்காடு சில்லறை பணவீக்கத்தாலும் பாதிப்படைந்துள்ளனர்.

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜெகதீசன்

இந்நிலையில், ஜிஎஸ்டி வரி விகிதம் மீண்டும் அதிகரிக்கப்பட்டால், தொழில் வணிகத் துறை மிகவும் பாதிப்படையும். ஏற்கனவே அத்தியாவசியப் பொருள்கள் உள்ளிட்ட அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருள்கள் மற்றும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்ற பல பொருள்களின் அபரிமிதமான விலை அதிகரிப்பால், சாமானிய மக்கள் திணறிவரும் நிலையில், பொருள்களின் மீதான கூடுதல் வரி விதிப்பு அவர்களை மேலும் பாதிப்படைச் செய்யும்.

ஜிஎஸ்டி வரி வருவாய் ஒவ்வொரு மாதமும் கணிசமான அளவு உயர்ந்து வரும் நிலையில், ஜிஎஸ்டி கவுன்சில் குறைந்த வரி விதிப்பில் உள்ள 143 பொருள்களின் மீது கூடுதலாக வரியை அதிகரிப்பது, தொழில் வணிகத் துறையினருக்கும், பொதுமக்களுக்கும் துரோகம் விளைவிக்கும் செயலாக இருப்பதோடு, தந்திரமான, பயங்கரமான நடவடிக்கையாகவும் அமையும்.

எனவே, ஜிஎஸ்டி கவுன்சிலும், மத்திய அரசும் இந்த வரி உயர்வை கைவிட வேண்டுமெனவும், நலிடைந்துள்ள தொழில் வணிகத் துறையை மீட்டெடுக்கும் வகையில், மாநில அரசும் ஜிஎஸ்டி கவுன்சிலின் இந்த முன்மொழிவிற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமென, தொழில் வணிகத் துறையின் சார்பில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஜி.எஸ்.டி உயர்வதாக வெளிவரும் தகவலுக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.