ETV Bharat / state

நிலுவை தொகையை உடனே வழங்க விவசாய சங்கங்கள்  போராட்டம்

மதுரை: கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய ரூ.19 கோடி பாக்கித் தொகையை உடனடியாக வழங்கக் கோரி பல்வேறு விவசாய சங்கங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

sugar
author img

By

Published : Jun 24, 2019, 10:14 PM IST

மதுரை அண்ணாநகர் பகுதியில் இயங்கும் சர்க்கரை ஆலைகளுக்கு அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் அரைவக்கு கரும்பு வழங்கியுள்ளனர். அப்படி கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் ரூ.19 கோடி ரூபாய் நிலுவைத் தொகை உள்ளது.

இதனையடுத்து அந்த நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க கோரி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், முல்லை பெரியாறு ஒரு போக பாசன விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனே வழங்கு

அப்போது அவர்கள் கூறுகையில், தற்போது போதிய மழை இல்லாமல் விவசாயிகள் பல்வேறு இடங்களில் கடன்களை பெற்று விவசாயம் செய்து வரும் நிலையில் சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குவதுடன், தமிழ்நாடு அரசு கரும்புக்கான விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Intro:
மதுரையில், கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய 19 கோடி பாக்கித் தொகையை உடனடியாக வழங்கக்கோரி பல்வேறு விவசாய சங்கங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டம்...!!Body:வெங்கடேஷ்வரன்
மதுரை
24.06.2019

மதுரையில், கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய 19 கோடி பாக்கித் தொகையை உடனடியாக வழங்கக்கோரி பல்வேறு விவசாய சங்கங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டம்...!!

மதுரை அண்ணாநகர் பகுதியில், சர்க்கரை ஆலைகளுக்கு அரவைக்கு கரும்புகள் வழங்கிய விவசாயிகள் தங்களுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய 19 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க கோரி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் மற்றும் முல்லை பெரியாறு ஒரு போக பாசன விவசாயிகள் சங்கம் சேர்ந்த விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் அப்போது அவர்கள் தற்போது போதிய மழை இல்லாமல் விவசாயிகள் பல்வேறு இடங்களில் கடன்களை பெற்று விவசாயம் செய்து வரும் நிலையில் சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குவதுடன் தமிழக அரசு கரும்புக்கான விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்,

பேட்டி ; - முருகன், தலைவர். முல்லை பெரியாறு ஒரு போக பாசன விவசாயிகள் சங்கம்.

Visual send in mojo kit
Visual name : TN_MDU_02_24_SUGARCANE FARMERS PROTEST_TN10003Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.