ETV Bharat / state

பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை ரயில் நிலையத்திற்கு சுரங்கப்பாதை

மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையம் வரை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் தெரிவித்துள்ளார்.

மதுரை ரயில் நிலையத்திற்கு சுரங்கப்பாதை
மதுரை ரயில் நிலையத்திற்கு சுரங்கப்பாதை
author img

By

Published : Dec 14, 2021, 9:51 AM IST

மதுரை : தெற்கு ரயில்வே பொதுமேலாளர் சென்னை, சேலம், திருச்சி, மதுரை, பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய கோட்டங்களில் ஆண்டுதோறும் ரயில்வே பிரிவை ஆய்வு செய்வது வழக்கம்.

அதன்படி இன்று (டிச.13) மதுரை - திருச்சி இரட்டை வழிப் பாதையில் "அப் லைனில்" ஆய்வு செய்தார். முதலில் மதுரை ரயில் நிலையத்தில் காலை 9 மணிக்கு ஆய்வை துவங்கிய அவர், மதுரை ரயில் நிலைய நவீன சிக்னல் ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். பின்பு முதலாவது நடைமேடையில் உள்ள பயணிகள் வசதிகள் மற்றும் நடைமேம்பாலம் ஆகியவற்றை பார்வையிட்டார்.

தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ்
தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ்

அதன் பின்பு, மதுரை ரயில் நிலைய புதிய கட்டிட பணித்திட்டங்களை சிறப்பு வீடியோ திரை மூலம் ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார். புதிய ரயில் நிலையம் இரண்டடுக்கு கட்டிடமாக அமைய இருக்கிறது. மேலும், ரயில் நிலையத்திலிருந்து பெரியார் பேருந்து நிலையத்திற்குச் செல்ல சுரங்கப்பாதை அமைக்கும் திட்டமும் இருக்கிறது.

தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ்
தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ்

இதனையடுத்து, பொது மேலாளர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "பாம்பன் பாலம் பணிகள் விரைவில் முடிவடையும். கரோனா தொற்றுக்கு முன்பு இயங்கிய பயணிகள் ரயில்கள் படிப்படியாக இயக்கப்படும்" என்றார்.

தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ்
தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ்

இந்த, ஆய்வின்போது பொது மேலாளருடன் முதன்மை வர்த்தக மேலாளர் ரவி வல்லூரி, முதன்மை ரயில் இயக்க மேலாளர் ஸ்ரீ குமார், முதன்மை பொறியாளர் பிரபுல்ல வர்மா ஆகியோர் கலந்து கொண்டனர். ரயில் இயக்கம், வர்த்தகம், சிக்னல், மருத்துவமனை மின் மயமாக்கல் பிரிவு ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சிறந்த பணியினை பாராட்டி குழு விருது வழங்கி கௌரவித்தார்.

தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ்
தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ்

இதையும் படிங்க: 15 மணி நேர சோதனை... பார் மேக்கப் அறை கண்ணாடிக்குப் பின் ரகசிய பாதாள அறை... 17 பெண்கள் மீட்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.