இதுதொடர்பாக அவர் பதிவு செய்துள்ள ட்வீட்டில், "தமிழ்நாட்டின் மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தித்திறன் 400 மெட்ரிக் டன். ஏப்ரல் மாத மத்தியில் நமது மருத்துவப் பயன்பாட்டிற்கான ஆக்ஸிஜன் தேவை 240 மெட்ரிக் டன்னாக இருந்தது.
ஆனால், கடந்த சில நாட்களாக நமது தேவை 350 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. நாம் அபாயகட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாடு அரசே, விரைந்து நடவடிக்கைகளில் இறங்கு" எனத் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் எதிர்வரும் நாட்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை எழும் என்ற சூழல் நிலவும் என மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இந்தியாவுடன் உறுதியாக துணை நிற்போம்' சீனா அரசு!