ETV Bharat / state

கார்ப்பரேட் நலனுக்காக இந்திய கடல்வளத்தை சீரழிக்க உதவும் சட்டம் - நாடாளுமன்றத்தில் சு. வெங்கடேசன் பேச்சு - boat broke bill talk su venkatesan

இந்தியாவிலுள்ள பெரும் நிறுவனங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டே கப்பல் உடைக்கும் மசோதாவை இந்திய அரசு கொண்டு வருகிறது என நாடாளுமன்றத்தில் மதுரை எம்பி சு.வெங்கடேசன் குற்றம்சாட்டினார்.

மதுரை மக்களவை உறுப்பினர் சு வேங்கடேசன்  மதுரை மக்களவை உறுப்பினர் சு. வேங்கடேசன் பேச்சு  கப்பல் உடைக்கும் மசோதா  கப்பல் உடைக்கும் மசோதா சு வேங்கடேசன்  boat broke bill talk su venkatesan  su venkatesan talks about boat broke bill in parliment
su venkatesan talks about boat broke bill in parliment
author img

By

Published : Dec 3, 2019, 11:45 PM IST

கப்பல் உடைக்கும் மசோதா மீது இன்று மதுரை மக்களவைத் தொகுதி எம்.பி. சு. வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் பேசுகையில்,கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக பலி கொடுக்கிற இந்த ஆட்சியினுடைய பல மசோதாக்களின் தொடர்ச்சியே இந்த மசோதா. குறிப்பாக மேற்கு உலக நாடுகள் வளர்ந்த நாடுகளில் கப்பல் உடைக்கும் தொழில்களை பெரும்பாலும் அனுமதிப்பதில்லை. அதற்கு காரணம் அந்த நாட்டினுடைய சுற்றுச்சூழலைப்பற்றி அங்கே இருக்கிறவர்களுக்கு விழிப்புணர்வும் அதற்கேற்றார்போல் உள்ள சட்டங்களும்தான்.

ஆனால், இன்றைக்கு உலகத்தில் ஒரு வருடத்திற்கு ஏறக்குறைய 900 கப்பல்கள் உடைக்கப்படுகின்றன என்றால் அவற்றில் 70விழுக்காடு கப்பல்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தில் உடைக்கப்படுகின்றன. இது இந்தியாவின் கடல் வளத்தை மிகப்பெரிய அளவுக்கு மாசுப்படுத்துகிற ஒரு சூழலை உருவாக்குகிறது.

இந்தியாவில் உடைக்கப்படுகிற 90 விழுக்காடு கப்பல்கள் பிரதமர் மோடி அவர்களுடைய சொந்த ஊரான அலங்கில் உள்ள துறைமுகத்தில்தான் உடைக்கப்படுகிறது. இந்தியாவில் சுற்றுச்சூழலில் மிக மாசடைந்த நகரங்களின் பட்டியலில் அலங் மிக முக்கிய இடத்தில் இருக்கின்றது. தன்னுடைய சொந்த ஊரினுடைய சுற்றுசூழலையே சரிப்படுத்த முடியாத நிலையில் பிரதமர் மோடி இருக்கிறாரா என்ற கேள்வியை இங்கு எழுப்ப வேண்டியுள்ளது.

கார்ப்பரேட் நலனுக்காக இந்திய கடல்வளத்தை சீரழிக்க உதவும் சட்டம் - சு. வெங்கடேசன்

சுற்றுச்சூழல் குறித்து மிக மோசமான நிலையை இந்தியா சந்தித்து கொண்டு இருக்கிற நேரத்தில், இது போன்ற மசோதாக்களை நீங்கள் கொண்டு வருவது மிகுந்த அதிர்ச்சியை உருவாக்குகிறது. இந்த மசோதாவில், 15 நாட்களுக்குள் அனுமதி கேட்கிறவர்களுக்கு அரசு முறையான அனுமதி கொடுக்கவில்லை என்றால் அனுமதி கொடுத்துவிட்டதாக அர்த்தம் என எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. இது மிகவும் ஆபத்தானது.

இந்தியாவில் பல இடங்களில் ஏற்பட்டு இருக்கிற சுற்றுச்சூழல் பிரச்னைக்கு இந்த விதி முன்னுதாரணமாக இருக்கிறது. இரண்டாவது, இந்த மசோதாவில் அபாயகரமான பொருட்கள் என்று பல இடங்களில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றது. ஆனால் அது என்ன அபாயகரமான பொருட்கள் என்று இந்த மசோதவில் குறிப்பிடவில்லை என்பதை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

மூன்றாவதாக இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு அபாரதத் தொகை 5 லட்சம் ரூபாய் அல்லது 10 லட்சம் ரூபாய் என்று நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். ஆனால் இந்த தொழிலில் மூலம் பல கோடி ரூபாய் லாபம் சம்பாதிப்பவர்கள் ஐந்து லட்சம் ரூபாய் அபாரதத்தை விதித்து விட்டு சம்பாதிப்பதிலேயே எந்த வித தயக்கமும் இருக்கப் போவதில்லை.

இந்த மசோதா குஜாரத்தை சேர்ந்த சில முதலாளிகளுக்கும் அல்லது சில கார்ப்பரேட் நலனுக்காகவும் கொண்டு வருகிறீர்களோ என்று நாங்கள் இங்கு நினைக்கிறோம். இறுதியாக எந்த தனி நபரோ இதன் மீது வழக்கு தொடுக்க முடியாது. அரசு அதிகாரிகளின் மீது வழக்கு தொடுக்க முடியாது என்றால் இந்த சட்டம் அப்பட்டமாக கார்ப்பரேட்களின் நலனுக்கானது இந்திய வளங்களை கார்ப்பரேட் நலனுக்கு அடகு வைக்கிற இது போன்ற சட்டங்களை இந்த நாடாளுமன்றம் நிராகரிக்க வேண்டுமென்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இதையும் படிங்க: மதுரை மாநகராட்சி செயலிழந்து விட்டது - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு

Intro:கார்ப்பரேட் நலனுக்காக இந்திய கடல்வளத்தை சீரழிக்க உதவும் சட்டம். - நாடாளுமன்றத்தில் சு வெங்கடேசன் பேச்சு

இந்தியாவிலுள்ள பெருநிறுவனங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டேகப்பல் உடைக்கும் மசோதாவை இந்திய அரசு கொண்டு வருகிறது என நாடாளுமன்றத்தில் மதுரை எம்பி சு வெங்கடேசன் குற்றஞ்சாட்டினார்Body:கார்ப்பரேட் நலனுக்காக இந்திய கடல்வளத்தை சீரழிக்க உதவும் சட்டம். - நாடாளுமன்றத்தில் சு வெங்கடேசன் பேச்சு

இந்தியாவிலுள்ள பெருநிறுவனங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டேகப்பல் உடைக்கும் மசோதாவை இந்திய அரசு கொண்டு வருகிறது என நாடாளுமன்றத்தில் மதுரை எம்பி சு வெங்கடேசன் குற்றஞ்சாட்டினார்

இம்மசோதா கொண்டு வருவது குறித்து நாடாளுமன்றத்தில் மேலும் அவர் பேசுகையில், கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக பலி கொடுக்கிற இந்த ஆட்சியினுடைய பல மசோதாக்களின் தொடர்ச்சியே இந்த மசோதாவும். குறிப்பாக மேற்கு உலக நாடுகள் வளர்ந்த நாடுகளில் கப்பல் உடைக்கும் தொழில்கள் பெரும்பாலும் அனுமதிக்கப்படுவதில்லை. அதற்கு காரணம் அந்த நாட்டினுடைய சுற்றுச்சூழலைப்பற்றி அங்கே இருக்கிற விழிப்புணர்வும் சட்டங்களும்

ஆனால் இன்றைக்கு உலகத்தில் ஏறக்குறைய 900 கப்பல்கள் ஒரு வருடத்திற்கு உடைக்கப்படுகிறது என்றால் அவற்றில் 70% கப்பல்கள் இந்தியா பாகிஸ்தான் மற்றும்; வங்காளதேசத்தில் உடைக்கப்படுகின்றன. இது இந்தியா கடல் வளத்தை மிக பெரிய அளவுக்கு மாசுப்படுத்துகிற ஒரு சூழலை உருவாக்குகிறது.

சென்னை மட்டுமல்ல பிரதமர் மோடி அவர்களுடைய சொந்த ஊரான அலாங்கில் இந்தியாவில் உடைக்கப்படுகிற 90% கப்பல்கள் அலாங் துறைமுகத்தில் உடைக்கப்படுகிறது. இந்தியாவில் சுற்றுச்சூழலில் மிக மாசடைந்த நகரங்களின் பட்டியலில் அலாங் மிக முக்கிய இடத்தில் இருக்கின்றது. தன்னுடைய சொந்த ஊரினுடைய சுற்றுசூழலையே சரிப்படுத்த முடியாத நிலையில் பிரதமர் மோடி இருக்கிறாரா?

சுற்றுச்சூழல் குறித்து மிக மோசமான நிலையை இந்தியா சந்தித்து கொண்டு இருக்கிற பொழுது இது போன்ற மசோதாக்களை நீங்கள் கொண்டு வருவது மிகுந்த அதிர்ச்சியை உருவாக்குகிறது.
இந்த மசோதாவின் அடிப்படையில் 15 நாட்களுக்குள் அனுமதி கேட்கிறவர்களுக்கு அரசு முறையான அனுமதி கொடுக்கவில்லை என்றால் அனுமதி கொடுத்துவிட்டதாக அர்த்தம் என எடுத்துக் கொள்ளலாம் என்று இந்த மசோதா சொல்கிறது. இது மிக ஆபத்தானது

இந்தியாவில் பல இடங்களில் ஏற்பட்டு இருக்கிற சுற்றுச்சூழல் பிரச்சனைக்கு இந்த விதி முன்னுதாரணமாக இருக்கிறது
இரண்டாவது அபயகரமான பொருட்கள் என்று இந்த மசோதாவில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றது. ஆனால் அது என்ன அபயகரமான பொருட்கள் என்று குறிப்பிடவில்லை என்பதை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

மூன்றாவதாக இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு அபாரதம் 5ஸலட்சம் அல்லது 10 லட்சம் என்று நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். ஆனால் இந்த தொழிலிலே சம்பந்தப்பட்டது பல நுறு கோடி ஆயிரம் கோடி பல நுறுகோடியை லாபம் சம்பதிப்பவர்கள் ஐந்து லட்சம் அபாரதத்தை விதித்;து விட்டு சம்பாதிப்பதிலே எந்த வித தயக்கமும் இருக்கப் போவதில்லை.

இது குஜாரத்தை சார்ந்த அல்லது சில கார்ப்பரேட் நலனுக்காக கொண்டு வருகிறீர்களோ என்று நாங்கள் இங்கு நினைக்கிறோம். இறுதியாக எந்த தனி நபரோ இதன் மீது வழக்கு தொடுக்க முடியாது. அரசு அதிகாரிகளின் மீது வழக்கு தொடுக்க முடியாது என்றால் இந்த சட்டம் அப்பட்டமாக கார்ப்பரேட்களின் நலனுக்கானது இந்திய வளங்களை கார்ப்பரேட் நலனுக்கு அடகு வைக்கிற இது போன்ற சட்டங்களை இந்த நாடாளுமன்றம் நிராகரிக்க வேண்டுமென்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாள்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.