ETV Bharat / state

மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக தேர்வான மதுரை வீரர் - எம்.பி. நேரில் பாராட்டு

author img

By

Published : Oct 27, 2022, 5:13 PM IST

இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ள சச்சின் சிவா என்ற இளைஞருக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக தேர்வாகியுள்ள மதுரை வீரருக்கு சு வெங்கடேசன் பாராட்டு

மதுரை: இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணி கேப்டனாக, சச்சின் சிவா எனும் இளைஞர் தேர்வாகியுள்ளார்.

மதுரை தெப்பக்குளம், மருது பாண்டியர் நகரில் வசித்துவருபவர், சிவா. போலியோவால் பாதிக்கப்பட்டு கால் பாதிப்புக்குள்ளான இவர் சிறுவயது முதலே கிரிக்கெட் விளையாட்டின் மீது தணியாத ஆர்வம் கொண்டவர். இவரது விளையாடும் திறனைப்பார்த்து நண்பர்கள் இவரை ’சச்சின்’ சிவா என்று அழைக்கத்தொடங்கினர். பிறகு அதுவே அவரது அடையாளமாகவும் மாறிப்போனது.

பள்ளி, கல்லூரி என தனது கிரிக்கெட் பயணத்தை தொடர்ந்த சச்சின் சிவாவிற்கு மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் பற்றி 2013இல் தெரியவந்தது. இதனையடுத்து தனது சொந்த முயற்சியால் தமிழ்நாடு அணியில் இடம்பிடித்தார். மிகக்குறுகிய காலத்திலேயே தமிழ்நாடு அணியை வழிநடத்தும் வாய்ப்பைப்பெற்றார். இதனையடுத்து 2016ஆம் ஆண்டு இந்திய மாற்றுத்திறனாளிகள் அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

அதில் சிறப்பாக விளையாடி 2019ஆம் ஆண்டு அணியின் துணைத் தலைவராக உயர்ந்தார். கடந்த 3 ஆண்டுகளாக புரிந்த சாதனைகள் அடிப்படையில் அவர் தற்போது கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வேகமாக அரை சதம் அடித்தது மற்றும் அதிக ரன்கள் குவித்தது எனப் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார், சச்சின் சிவா.

இது குறித்துப்பேசிய சிவா, “எனது 15 ஆண்டு கால கடின உழைப்பு கைகொடுத்துள்ளது. நான் இந்திய அணியை வழிநடத்தப்போவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இத்தனை ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடினாலும் எங்களுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. எங்கள் சம்பளம்கூட பிரதான அணிக்கு நிகராக இருந்ததில்லை” என்றார்.

மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக தேர்வாகியுள்ள மதுரை வீரருக்கு சு.வெங்கடேசன் பாராட்டு

தமிழ்நாட்டைச்சேர்ந்த சச்சின் சிவா இந்திய மாற்றுத்திறனாளிகளின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டதற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உட்பட பலரும் வாழ்த்தி வருகின்றனர். இந்நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சு.வெங்கடேசன் சச்சின் சிவாவை அழைத்து பொன்னாடை போர்த்தி பாராட்டினார்.

இதையும் படிங்க: ஜிம்னாஸ்டிக்கில் உலக சாதனை படைத்த அண்ணன் தங்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.