ETV Bharat / state

மதுரையில் அணுக்கரு ஆற்றல் உற்பத்தி குறித்து மாணவர்களுக்குப் பயிற்சி - அணுக்கரு ஆற்றல் உற்பத்தி பயிற்சி வகுப்புகள்

மதுரை அரசு அருங்காட்சியகத்தில் அணுக்கருவின் மூலமாக ஆற்றல் உற்பத்தி செய்வது குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (ஆக.22) நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.

Etv Bharat மதுரையில் அணுக்கரு ஆற்றல் உற்பத்தி குறித்து மாணவர்களுக்கு பயிற்சி

author img

By

Published : Aug 22, 2022, 4:38 PM IST

மதுரை: அணுக்கருவின் மூலமாக ஆற்றல் உற்பத்தி செய்வது குறித்த செயல்முறை பயிற்சி தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரை அரசு அருங்காட்சியகத்தில் இன்று (ஆக. 22) நடைபெற்றது.

இதுகுறித்து மதுரை மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் மருது பாண்டியன் கூறுகையில், “நியூக்ளியர் பவர் உற்பத்தி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை அரசு அருங்காட்சியகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இதில், அரசின் சார்பாக நியூக்ளியர் பவர் செயல்வடிவம் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் மாதிரி வடிவம் ஒன்று அரசுத்தரப்பில் இன்று அருங்காட்சியகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த மாதிரி வடிவம் மூலம் தொழிற்சாலைகள் மற்றும் அடுத்தகட்ட தலைமுறைக்கு நியூக்ளியர் பவர் எப்படி பயன்பட உள்ளது என்பது குறித்த விழிப்புணர்வு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இனி, தினமும் காலை 11 மணியிலிருந்து கல்லூரி, பள்ளி மாணவ மாணவியருக்கு நியூக்ளியர் ஆற்றலின் சிறப்பு குறித்து விளக்குவதற்குப் பயிற்சி அளிக்கப்பட்ட பயிற்சியாளர், அரசு அருங்காட்சியகத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார். இயற்பியல் துறையில் பயிலும் மாணவர்களுக்கு நியூக்ளியர் பவர் குறித்த அறிவை வளர்த்துக்கொள்வதற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

இந்த நியூக்ளியர் பவர் மாடலில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மூன்று மொழியில் ப்ரோக்ராம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் நேரடியாக வந்து விளக்கத்தைக் கேட்டாலும் விளக்குவதற்கு பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள். அந்த மாதிரி வடிவில் மொழியைத் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் அதிலிருந்து விளக்கம் அளிக்கும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாணவர் சமூகத்திற்கு நியூக்ளியர் பவர் மாடல் பெரிதும் பயன்படும்” என்றார்.

மதுரையில் அணுக்கரு ஆற்றல் உற்பத்தி குறித்து மாணவர்களுக்குப் பயிற்சி

இந்த கண்காட்சியில் அமெரிக்கன் கல்லூரி இயற்பியல் துறை மாணவர்கள், மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி மாணவர்கள், லேடி டோக் மகளிர் கல்லூரி மாணவர்கள், திருமலை நாயக்கர் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டப் பல்வேறு கல்லூரி மாணவர்கள் இந்த வகுப்பில் இணைந்து பயிற்சி பெற்றுக்கொண்டனர்.

இதையும் படிங்க: சென்னையில் தடையை மீறி குப்பை கொட்டியவர்களுக்கு ரூ. 22 லட்சம் அபராதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.