ETV Bharat / state

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு: மதுரை, கோவையில் ரயில் மறியல்!

மதுரை: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவைக் கண்டித்து அனைத்திந்திய மாணவர் சங்கம் அமைப்பினர் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Students Union Rail Roko Protest Across Tamilnadu
Students Union Rail Roko Protest Across Tamilnadu
author img

By

Published : Dec 16, 2019, 8:24 PM IST

மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்திருத்தத்தைக் கண்டித்து நாடு முழுவதும் பொதுமக்கள் போராடிவருகின்றனர். நேற்று இரவு டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் காவல் துறையினரால் தாக்கப்பட்ட பின், பல்வேறு தரப்பினர் மத்தியிலும் இந்தப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் அனைத்திந்திய மாணவர் சங்க அமைப்பினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாணவர் சங்கம்
கோவை மாணவர் சங்கம்

இதன் ஒருபகுதியாக கோவை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சேவ் டெமாக்ரசி, சேவ் எஜுகேசன் என முழக்கங்கள் எழுப்பியதோடு, குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தினர். அதையடுத்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்படும் போராட்டக்காரர்கள்
கைது செய்யப்படும் போராட்டக்காரர்கள்

இதேபோல் மதுரை ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பெண்கள் உட்பட 47 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

ரயில் மறியல்
இந்திய மாணவர் சங்கத்தினர் ரயில் மறியல்

இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் எர்ணாகுளம் விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட பேரணியாக வந்தனர். அதனால் அவர்களைத் தடுத்து நிறுத்திய காவல் துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தொடர்ந்து பேரணியாக வந்த மாணவர்கள் காவல் துறையினரின் தடுப்புகளை மீறி, தண்டவாளத்தில் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட மாணவர்களை காவல் துறையினர் கைது செய்னர்.

குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு

இதையும் படிங்க: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த அஸ்ஸாம் அரசு பணியாளர்கள்

Intro:குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் ரயில் மறியல் போராட்டம்

Body:குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்து அனைத்திந்திய மாணவர் சங்கம் அமைப்பினர் சுமார் 30க்கும் மேற்பட்டோர் கோவை ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சேவ் நினைச்சேன் சேவ் டெமாக்ரசி, சேவ் எஜுகேசன் என்ற பேனரை கையில் ஏந்தியவாறும் சட்டத் திருத்த மசோதாவை வாபஸ் வாங்கு என்றும் கைகளில் ஏந்தியவாறு வந்தனர். மேலும் மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். ரயில் நிலையத்திற்குள் ரயில் மறியலுக்கு செல்ல முயன்றவர்களை போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர் அப்போது அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது மாணவர்கள் சிலர் கீழே விழுந்து அடிபட்டனர் இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அனைத்திந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் நிரூபன் அரசு இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களை பிரிப்பதற்கு என்பதற்காகவே இப்படி ஒரு சட்ட மசோதாவை ஏற்படுத்தியுள்ளது என்றும் இந்தியா சுதந்திரம் அடைவதற்காக உயிர்களை தந்தவர்களில் முஸ்லிம்கள் 30% என்றும் ஆனால் தற்போது 14% மட்டுமே உள்ளனர் என்றும் அவர்களுக்கும் குடியுரிமை வழங்கப்படாதது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்தார். பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் மேல் தன் கண்டனத்தை வைப்பதாக தெரிவித்தார் இன்னும் கூடிய விரைவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அசாம் முதல் குஜராத் வரை உள்ள அனைத்து இலங்கை வாழ் மக்களுக்கும் மற்றும் முஸ்லிம்களுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார் இல்லை எனில் போராட்டங்கள் மீண்டும் தொடரும் என்றும் கூறினார்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.