மதுரை: தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரி என்ற பெண் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதுநிலை கல்வியியல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலையில் பல்கலைக்கழகத்தில் உள்ள பெண்கள் விடுதி மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.
இதனைக் கண்ட அவரது நண்பர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த நாகமலை புதுக்கோட்டை போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். மாடியிலிருந்து மாணவி மகேஸ்வரி தவறி விழுந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மாணவி உடல் அருகே செல்போன் இருந்ததால் செல்போன் பேசிக்கொண்டே தவறி விழுந்திருக்கலாம் எனக் கருதுகின்றனர். கல்லூரி மாணவி மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பல்கலைக்கழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தூத்துக்குடி - மேலூரில் ஒரு மாதத்திற்கு ரயில்கள் நிற்காது… காரணம் என்ன?