தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சார்பாக மதுரை மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் காவல் துறை உயர் அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த் பேசுகையில், "தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதைப் பழக்கங்கள் சமீபகாலமாக அதிகரித்துவருகிறது. அதனை தடுப்பதற்கும் கட்டுப்படுத்த தற்போது தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம், காவல் துறை இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார்கள்.
அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுக்கோட்டையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வலி நிவாரண மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசியாக மாற்றி போதையேற்றும் பழக்கத்தை மாணவர் மத்தியில் பரப்பியதாக சுமார் ஐந்து பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும், வலி நிவாரண மாத்திரைகளை தண்ணீர் கரைத்து ஊசி மூலம் உடலில் ஏற்றிக் கொள்ளும் பழக்கம் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் பரவத் தொடங்கியுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது. இருப்பினும் அதனைக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் தொடர்ந்து தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணையம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:
வழக்கறிஞர்களும் காவல் துறையினரும் நண்பர்களாக இருங்க! - நீதிபதி அறிவுரை