மதுரை: மதுரை மாநகராட்சியில் புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட ஆணையர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் இன்று (ஜுன் 2) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், "மதுரை மாநகராட்சியில் துறை வாரியாக அலுவலர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளேன். மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கியை செலுத்தாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
மதுரை நகரத்தின் அழகை மேம்படுத்த தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். மாநகராட்சி வார்டு பகுதிகளில் சாலை பணிகள் முறையாக மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: சட்டவிரோதமாக செயல்படும் ஓய்வு விடுதிகளை மூடக்கோரிய மனு: வனத்துறை பதிலளிக்க உத்தரவு