ETV Bharat / state

வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட செந்தூர் எக்ஸ்பிரஸ்.. 10 மணி நேரத்திற்கும் மேலாக சிக்கி தவிக்கும் 500 பயணிகளின் நிலை என்ன?

Srivaikundam track has been damaged due to heavy rain: கடந்த 2 நாட்களாக தென்மாவட்டங்களில் கனமழை பெய்துவரும் நிலையில், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி இடையேயான ஸ்ரீவைகுண்டம் தண்டவாளத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

பயணிகளுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கிய மீட்புக்குழு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 18, 2023, 9:44 PM IST

Updated : Dec 18, 2023, 11:08 PM IST

மதுரை: திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் டிசம்பர் 17ஆம் தேதி காலை 08.30 மணி முதல் டிசம்பர் 18ஆம் தேதி காலை 08.30 மணி வரை 932 மி.மீ. மற்றும் 670 மி.மீ. எதிர்பாராத மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இதன் காரணமாக இந்த மாவட்டங்களில் உள்ள ரயில் பாதைகளின் பல்வேறு பகுதிகளில் சரளை கற்களை வெள்ள நீர் அடித்துச் சென்றுள்ளது. அதனால் ரயில் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தாழையூத்து - கங்கைகொண்டான் ரயில் பிரிவில் 7.71 கி.மீ. ரயில் பாதை வெள்ள நீரால் பாதிக்கப்பட்டுள்ளது. மண்ணரிப்பு மற்றும் சரளைக் கற்கள் முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, நைனார் குளம் நிரம்பி வழிவதால் திருநெல்வேலி ரயில் நிலையம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அதிக மழை காரணமாகத் தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ரயில் பாதைக்கு மேல் ஒரு மீட்டர் அளவிற்கு வெள்ள நீர் தேங்கியுள்ளது.

திருநெல்வேலி அருகே உள்ள செய்துங்கநல்லூர் - ஸ்ரீ வைகுண்டம் ரயில் நிலையங்கள் இடையே 12.16 கி.மீ தூரத்திற்குப் பாதையில் சரளை கற்கள் வெள்ள நீரால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. மழை நின்று வெள்ள நீர் குறைந்தவுடன் சீரமைப்பு பணிகள் துவங்க இருப்பதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இதற்காக ரயில்வே பொறியியல் பிரிவு தேவையான ஊழியர்கள் மற்றும் உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் தட்டப்பாறை - மேல விட்டான் ரயில் நிலையங்களுக்கிடையே 7.47 கி.மீ தூர ரயில் பாதையில் உள்ள 9 நீர்வழிப் பாலங்களில் அபாயகர அளவில் வெள்ளநீர் சென்று கொண்டிருக்கிறது.

ஸ்ரீ வைகுண்டம் - செய்துங்கநல்லூர் ரயில் பாதையில் திடீர் பாதிப்பு ஏற்பட்டதால் டிசம்பர் 17ஆம் தேதி அன்று இரவு 08.25 மணிக்குப் புறப்பட்ட திருச்செந்தூர் - சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் 33 கி.மீ பயணத்திற்குப் பிறகு பாதுகாப்பு காரணங்களுக்காக ஸ்ரீ வைகுண்டம் ரயில் நிலையத்தில் இரவு 9.19 மணிக்கு நிறுத்தப்பட்டது. இந்த ரயிலில் சுமார் 800 பயணிகள் பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. மாநில அரசு அதிகாரிகள் உதவியுடன் டிசம்பர் 18ஆம் தேதி அன்று அதிகாலையில் 300 பயணிகள் மீட்கப்பட்டு 4 பேருந்துகள் மற்றும் 2 வேன்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு அருகில் உள்ள பள்ளியில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டனர்.

மாநில அரசு அதிகாரிகள் மற்றும் போலீஸ் உதவியுடன் பள்ளியில் தங்க வைக்கப்பட்ட 300 பயணிகளுக்கு உணவு மற்றும் குடிநீர் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, ரயிலிலே சிக்கிய மீதமுள்ள 500 பயணிகளைச் சாலை ஏற்பட்ட உடைப்பினால் மீட்க இயலாமல் போனது. இதையடுத்து, ரயிலிலே சிக்கிய பயணிகளுக்குச் சாலை மார்க்கமாக உணவு கொடுக்க வழியில்லாத காரணத்தால், 2 டன் நிவாரணப் பொருட்களுடன் ஹெலிகாப்டர் ஒன்று கோவை மாவட்டம் சூலூரில் இருந்து ஸ்ரீ வைகுண்டத்திற்கு வந்தது.

தொடர் மழை மற்றும் சாலை போக்குவரத்து துண்டிப்பு காரணமாகப் பயணிகளை வெளியேற்றுவதில் சிரமம் நீடித்து வருகிறது. அதனால் அவர்கள் ரயில் பெட்டிகளிலும் ரயில் நிலையத்திலும் பாதுகாப்பாகத் தங்குவதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்காக போதிய மின் விளக்கு வசதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேவையான உணவு மற்றும் குடிநீர் ஆகியவை ரயில் நிலையத்தில் போதுமான அளவில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் பயணிகளை மீட்பது சிரமம் என்பதனால் டிசம்பர் 19ஆம் தேதி அன்று பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டுச் சிறப்பு ரயில்கள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: தென் மாவட்டங்களில் கனமழையால் மின் விநியோகம் பாதிப்பு..! சீரமைக்க சிறப்புக்குழு அமைத்து அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

Last Updated : Dec 18, 2023, 11:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.