ETV Bharat / state

நாடாளுமன்ற அத்துமீறல் விவகாரம்; இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும் - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் - நாடாளுமன்ற பாதுகாப்பு விவகாரம்

Parliament security breach issue: நாடாளுமன்ற அத்துமீறல் விவகாரம் குறித்து பேசிய வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், “இளைஞர்களுக்கு வேலை அவசியம் வேண்டும். சுய தொழில் முனைவோர்களாக இன்றைய இளைஞர்களை உருவாக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

parliament security breach issue art of living founder ravi shankar said Employment should be created for youth
வாழும் கலை அமைப்பு நிறுவனர் ரவிசங்கர்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 17, 2023, 10:27 AM IST

வாழும் கலை அமைப்பு நிறுவனர் ரவிசங்கர் பேட்டி

மதுரை: தமுக்கம் மைதானத்தில் வாழும் கலை அமைப்பு சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்திருந்த அவ்வமைப்பின் நிறுவனர் ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்தியாவில் பல்வேறு ஆறு, குளங்களை நாங்கள் புனரமைத்து உள்ளோம். அதேபோல வைகை ஆற்றையும் புனரமைக்க உள்ளோம். காலநிலை மாற்றத்தை தவிர்ப்பதற்கு உண்டான பணிகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில், தமிழகத்தில் பல மாவட்டங்கள் நீரில் மூழ்கி விடும்.

தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகமாக உள்ளது. அதை பயன்படுத்தாமல் தடுப்பதற்கு சுவாசப் பயிற்சிகளை அளிக்க திட்டமிட்டுள்ளோம். இளைஞர்கள் தீய பழக்க வழக்கங்களில் இருந்து மீள்வதற்கு, போதை வஸ்துக்கள் அளிக்கும் இன்பத்தை விட மேலான இன்பம் அளிக்கும் பயிற்சிகளை துவங்கியுள்ளோம்.

தமிழகத்தில் உள்ள உணவுகள்தான் உலகத்திலேயே மிகச் சிறந்தவை என கண்டறிந்துள்ளனர். நமது உணவுப் பழக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ரசத்தில் 40 விதமான மருத்துவ குணங்கள் நிறைந்த பொருட்கள் உள்ளன” என்றார். மேலும், நாடாளுமன்ற வளாகத்தில் நிகழ்ந்த பாதுகாப்பு மீறல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “இளைஞர்களுக்கு வேலை அவசியம் வேண்டும். சுய தொழில் முனைவோர்களாக இன்றைய இளைஞர்களை உருவாக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. அறநிலையத்துறை இணை ஆணையர் பதிலளிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.