ETV Bharat / state

தொடர்கிறதா லாக்அப் மரணங்கள்?

மதுரை: விசாரணைக்கு அழைத்துச் சென்ற மாணவனின் மரணம் தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட உதவி ஆய்வாளர்கள் மீண்டும் பணியமர்த்தபட்டதைக் கண்டித்து அணைக்கரைப்பட்டி கிராம மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் விடிய விடிய தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Madurai
Madurai
author img

By

Published : Oct 15, 2020, 11:41 PM IST

மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள அணைக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவர் ரமேஷ். இவரை காவல்துறையினர் கடந்த செப் 16ஆம் தேதி விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். செப் 17ஆம் தேதி, ஊருக்கு அருகிலுள்ள மலையடிவார மரத்தில் ரமேஷ் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாகவும், விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவரது குடும்பத்தினர், உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து மதுரை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் சுஜித்குமார் நேரில் வந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதையடுத்து அவரின் உடலுக்கு அன்று மாலையே உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டது. இதை தொடர்ந்து ரமேஷின் சடலம் அனைக்கரைப்பட்டி மைதானத்தில் புதைக்கப்பட்டது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட சாட்டூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் ஜெயக்கண்ணன், பரமசிவம் ஆகிய இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் ரமேஷ் மரணம் தொடர்பாக அவரது சகோதரர் சந்தோஷ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சார்பு ஆய்வாளர்கள் திரும்பவும் பணிக்கு திரும்பியுள்ளனர். எனவே சார்பு ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், கைது செய்யக்கோரியும் அணைக்கரைப்பட்டி கிராம மக்கள் அணைக்கரைப்பட்டி மைதானத்தில் ஒன்றிணைந்து கண்களில் கறுப்புத்துணி அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் .

ரமேஷின் குடும்பத்தினருக்கு அரசு வேலையும், இழப்பீடு தொகையையும் வழங்கக்கோரி காவல் ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

மேலும், வழக்கு நிலுவையில் உள்ள போதே சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர்கள் மீண்டும் பணியமர்த்தப்பட்டதை கண்டித்து மதுரை மாவட்டம் பேரையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அணைக்கரப்பட்டி கிராம் மக்கள் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு தங்களது ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டையை அரசிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.