தூத்துக்குடி: மைசூர் - தூத்துக்குடி இடையே ஒரு சிறப்பு கட்டண ரயிலை இயக்க தென்மேற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி மைசூர் - தூத்துக்குடி சிறப்பு கட்டண ரயில் (06253) நவம்பர் 04, 11, 18 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் மைசூரில் இருந்து மதியம் 12.05 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 05.00 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும்.
மறுமார்க்கத்தில் தூத்துக்குடி - மைசூர் சிறப்பு கட்டண ரயில் (06254) நவம்பர் 05, 12, 19ஆகிய சனிக்கிழமைகளில் மாலை 03.00 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 08.30 மணிக்கு மைசூர் சென்று சேரும்.
இந்த ரயில்கள் யெலியூர், மாண்டியா, பெங்களூர், பெங்களூர் கன்டோன்மென்ட், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்றுசெல்லும்.
இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதிப்பெட்டி, 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப்பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப்பெட்டிகள் இணைக்கப்படும் என தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ஈபிஎஸ் தரப்பினர் மரியாதை