ETV Bharat / state

தெற்கு ரயில்வேயில் இதுவரை 82% ரயில் பாதைகள் மின் மயமாக்கம்: மதுரை கோட்டம் - ரயில் பாதைகள் மின் மயமாக்கல் பணி

மதுரை கோட்டத்தில் 410 கி.மீ., தூர ரயில் பாதை மின்மயமாக்கம் செய்யப்பட்டுள்ளது என்றும்; தெற்கு ரயில்வேயில் இதுவரை 82 விழுக்காடு ரயில் பாதைகள் மின் மயமாக்கப்பட்டுள்ளன என்றும் மதுரை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

மதுரை கோட்டம்
மதுரை கோட்டம்
author img

By

Published : Jun 7, 2022, 9:23 PM IST

மதுரை: தெற்கு ரயில்வேயின் மதுரைக் கோட்டம் இன்று (ஜூன் 7)வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, "மதுரை கோட்டத்தில் கடந்த 8 ஆண்டுகளில் பல்வேறு ரயில்வே திட்டப் பணிகள் விரைவாக நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த 8 ஆண்டுகளில் மதுரை - தேனி, செங்கோட்டை- ஆரியங்காவு உள்பட 94 கி.மீ., தூர ரயில் பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டுள்ளன.

திருச்சி - திண்டுக்கல், திருமங்கலம் - திருநெல்வேலி, வாஞ்சி மணியாச்சி - மீளவிட்டான் ரயில் பாதைத்திட்டங்கள் 282 தூர ரயில் பாதை இரட்டை ரயில் பாதைகளாக மாற்றப்பட்டுள்ளன. மேலும் விருதுநகர் - திருநெல்வேலி, வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி, மதுரை - மானாமதுரை, மானாமதுரை - ராமநாதபுரம், திருச்சி - காரைக்குடி, பழனி - பொள்ளாச்சி, மானாமதுரை - விருதுநகர் உள்பட 410 கி.மீ., தூர ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது. ரயில் பாதை மின்மயமாக்கல் திட்டம் சுற்றுச்சூழலுக்கு உகந்த, விரைவான ரயில் போக்குவரத்தை உறுதி செய்கிறது.

2023ஆம் ஆண்டிற்குள் இந்திய ரயில்வேயில் உள்ள அனைத்து ரயில் பாதைகளும் மின்மயமாக்கப்பட்டுவிடும். தெற்கு ரயில்வேயில் இதுவரை 82 விழுக்காடு ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டில் கடந்த 8 ஆண்டுகளில் 1664 கி.மீ., தூர ரயில் பாதைகள் மின் மயமாக்கப்பட்டுள்ளது" என மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: இனி மாதம் 24 ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்... ஆனால்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.