ETV Bharat / state

Holiday Special Trains: தொடர் விடுமுறையால் தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள்! - tirunelveli

ஆகஸ்ட் 15 (செவ்வாய்) சுதந்திர தினத்தை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக கூட்ட நெரிசலை சமாளிக்க சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சுதந்திர தின தொடர் விடுமுறையை ஒட்டி கூட்ட நெரிசலை சமாளிக்க தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள்!

author img

By

Published : Aug 9, 2023, 4:40 PM IST

மதுரை: விடுமுறை நாட்களில் தொலைதூரத்திலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் பயணிக்க ரயில்களை பெரிதும் பயன்படுத்துகின்றனர். இந்த வாரம் (ஆக.12) இரண்டாம் சனிக்கிழமை, (ஆக.13) ஞாயிற்றுக்கிழமை, (ஆக.15) சுதந்திர தினம் என தொடர்ந்து அரசு விடுமுறைகள் வருகிறது.

இந்நிலையில் விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க தாம்பரம் - நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தொடர் விடுமுறை காலங்களில் சென்னையில் பணியாற்றும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் மட்டுமன்றி தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பும் பயணிகளின் நலன் கருதி தெற்கு ரயில்வே அவ்வப்போது சிறப்பு ரயில்களை இயக்கும். இதன் மூலம் ரயில்வே துறை கூட்ட நெரிசலை சமாளித்து வருகிறது.

இந்த சிறப்பு ரயில்கள் மூலமாக பொதுமக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் என்றாலும் அதற்கு முன்பாக சனி, ஞாயிற்று கிழமைகள் வருகின்ற காரணத்தால் தொடர் விடுமுறை வருகிறது. ஆகையால் வருகின்ற ஆகஸ்ட் 11ஆம் தேதி துவங்கி 15ஆம் தேதி வரை தொடர் விடுமுறையாக இருப்பதால் சென்னையில் உள்ள மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வர். இதனால் ரயில்களில் கூட்ட நெரிசல் ஏற்படும்.

இதையும் படிங்க: Tiruchendur Express: தென் மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. 'சூப்பர் பாஸ்ட்' ரயிலாக திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ்!

இதனை தவிர்க்கும் விதமாக தெற்கு ரயில்வேயின் சார்பில் தாம்பரம் - திருநெல்வேலி - தாம்பரம் இடையே சிறப்பு விரைவு ரயில் இயக்க இருப்பதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. அதன்படி வருகின்ற 11 ஆம் தேதி (06051) தாம்பரத்திலிருந்து சிறப்பு விரைவு ரயில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4: 15 மணியளவில் திருநெல்வேலியை சென்றடையும்.

அதே போல (06052) திருநெல்வேலியில் இருந்து ஆகஸ்ட் 12 ஆம் தேதி மாலை 5:50 மணி அளவில் புறப்படும் ரயில் மறுநாள் காலை 4:10 மணியளவில் தாம்பரம் சென்றடையும். இதில் இரண்டு முதல் வகுப்பு ஏசி பெட்டிகள், 9 படுக்கை வசதி உடைய பெட்டிகள், 5 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு ரயில் தாம்பரம், செங்கல்ப்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: புதிய ரயில்களை எதிர்பார்த்து காத்திருக்கும் தென்காசி மக்கள்.. நிறைவேற்றுமா மத்திய அரசு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.