மதுரை : மேல்மருவத்தூர் ஓம்சக்தி பக்தர்கள் வசதிக்காக தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் அனைத்து ரயில்களும் மேல்மருவத்தூரில் நின்று செல்ல தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் டிசம்பர் 1 முதல் ஜனவரி 25 வரை இருமுடித் திருவிழா நடைபெறுகிறது. எனவே, பயணிகள் வசதிக்காக தென் மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும் பல்வேறு விரைவு ரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்படி தற்காலிக நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.
மேல்மருவத்தூரில் நின்று செல்லும் ரயில்களின் பட்டியல் விவரம் வருமாறு :
வ.எண் | தேதி | மேல்மருவத்தூரில் நின்று செல்லும் ரயில்கள் |
1. | நவம்பர் 30 முதல் ஜனவரி 24 வரை | மதுரை - சென்னை பாண்டியன் எக்ஸ்பிரஸ் (12638) செங்கோட்டை - சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ் (12662) நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (20692) கொல்லம் - சென்னை எக்ஸ்பிரஸ் (16102) நாகர்கோவில் - தாம்பரம் எக்ஸ்பிரஸ் (22658) |
2. | நவம்பர் 30 முதல் ஜனவரி 21 வரை | செங்கோட்டை - சென்னை சிலம்பு எக்ஸ்பிரஸ் (20682) |
3. | டிசம்பர் 1 முதல் ஜனவரி 25 வரை | மதுரை - சென்னை - மதுரை வைகை எக்ஸ்பிரஸ் (12636/12635) சென்னை - மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் (12637) சென்னை - செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் (12661) தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (20691) |
4. | டிசம்பர் 1 முதல் ஜனவரி 24 வரை | செங்கோட்டை - தாம்பரம் எக்ஸ்பிரஸ் (20684) கன்னியாகுமரி - டெல்லி நிஜாமுதீன் திருக்குறள் எக்ஸ்பிரஸ் (12641) |
5. | டிசம்பர் 3 முதல் ஜனவரி 21 வரை | ராமேஸ்வரம் - அயோத்தியா கண்டோன்மென்ட் சேது சிரத்தா எக்ஸ்பிரஸ் (22613) பனாரஸ் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (22536) |
6. | டிசம்பர் 3 முதல் ஜனவரி 23 வரை | மதுரை - டெல்லி நிஜாமுதீன் சம்பர்கிரந்தி எக்ஸ்பிரஸ் (12651) |
7. | நவம்பர் 29 முதல் ஜனவரி 17 வரை | அயோத்தியா கண்டோன்மென்ட் - ராமேஸ்வரம் சேது சிரத்தா எக்ஸ்பிரஸ் (22614) |
8. | நவம்பர் 30 முதல் ஜனவரி 23 வரை | டெல்லி நிஜாமுதீன் - மதுரை சம்பர் கிரந்தி எக்ஸ்பிரஸ் (12652) |
9. | டிசம்பர் 1 முதல் ஜனவரி 19 வரை | நாகர்கோவில் - சென்னை எக்ஸ்பிரஸ் (12668) மதுரை - மும்பை குர்லா எக்ஸ்பிரஸ் (22102) புவனேஸ்வர் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (20896) |
10. | டிசம்பர் 1 முதல் ஜனவரி 21 வரை | சென்னை - மதுரை எக்ஸ்பிரஸ் (22623) - (தஞ்சாவூர் மெயின் லைன் வழி) |
11. | டிசம்பர் 1 முதல் ஜனவரி 20 வரை | புவனேஸ்வர் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (20895) |
12. | டிசம்பர் 3 முதல் ஜனவரி 24 வரை | தாம்பரம் - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (22657) |
13. | டிசம்பர் 3 முதல் ஜனவரி 25 வரை | தாம்பரம் - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் (20683) |
14. | டிசம்பர் 7 முதல் ஜனவரி 25 வரை | சென்னை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (12667) |
15. | டிசம்பர் 6 முதல் ஜனவரி 24 வரை | மும்பை குர்லா - மதுரை எக்ஸ்பிரஸ் (22101) |
16. | டிசம்பர் 6 முதல் ஜனவரி 18 வரை | ராமேஸ்வரம் - பனாரஸ் எக்ஸ்பிரஸ் (22535) |
மேலே அட்டவணையில் குறிப்பிடப்பட்ட ரயில்கள் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் தற்காலிகமாக நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: சென்னை ரயிலில் 100 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு! ரயில் உணவு மோசமா? என்ன காரணம்?