இதுகுறித்து இன்று (மே.25) தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, "பயணிகளின் போதிய ஆதரவின்மை காரணமாக, சில ரயில்கள் ஜூன் 1ஆம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த ரயில்களின் சேவை மேலும் 15 நாட்களுக்கு ரத்து நீட்டிப்பு செய்யப்படுகிறது.
மே 31ஆம் தேதி வரை, தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த வண்டி எண் 06191 தாம்பரம் - நாகர்கோயில் சிறப்பு ரயில் ஜுன் 15ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. அதேபோல ஜுன் 1 வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த வண்டி எண் 06192 நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு ரயில் ஜுன் 16 வரை ரத்து செய்யப்படுகிறது.
ஜுன் 31 வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த வண்டி எண் 06791 திருநெல்வேலி - பாலக்காடு சிறப்பு ரயில் ஜுன் 15 வரை ரத்து செய்யப்படுகிறது.